பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

59


| அரசு நாட்டினான் | அரசு நாட்டினான் - சிறையில் அண்ணன் நாட்டினான் விரைவில் நாட்டிலும் - நமது அரசு நாட்டுவான் முரசம் ஆர்த்தது _வெற்றி முரசம ஆாததது பரசி வாழ்த்துவோம் - அண்ணன் படையை வாழ்த்துவோம் பகைகள் நீங்கவே நல்ல பான்மை ஓங்கவே குகையின் வேங்கைகாள் - ஒன்று கூடு வீர்களே பகைகள் மிஞ்சுமோ - நமது படைகள் கொஞ்சமோ! புகையும் நெஞ்சிலே - கனல் பொங்கி விஞ்சுமே உடலும் ஒன்றுதான் - பெற்ற உயிரும் ஒன்றுதான் அடிமை போகவே - போரில் அவற்றை ஈகுவோம் கடமை ஆற்றுவோம் - நாடு காவல் போற்றுவோம் உடைமை திராவிடம் - என்றே உலகில் சாற்றுவோம் வாழ்க தாயகம் - என்றும் வாழ்க திராவிடம் வாழ்க வாழ்கவே - அண்ணன் வாழ்க வாழ்கவே (1962 சூலை 19-இல் அஃக விலை உயர்வை எதிர்த்து மறியல் செய்தமைக்காகச் சிறைப்படுத்தப்பட்ட அறிஞர் அண்ணா, வேலூர் சிறையில் தமது பிறந்த நாளையொட்டி அரசங் கன்று நாட்டினார். அதன் நினைவாகப் பாடப்பட்டது இப்பாட்டு)