பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ஞாயிறும் திங்களும்


58 ஞாயிறும் திங்களும் புரியும் வீரன் போரினில் தீரன் உரியநம் தம்பி உழைப்பால் உயர்ந்தோன் கருணா நிதியவன் காத்தனன் மானம்

  • கறங்கெனச் சுழலும் கழகத் தோழர்

பறந்துபறந் தாற்றிடும் அயராப் பணியினர் துட்ட விலங்குகள் உட்புக விடாது வட்டந் தோறும் வட்டமிட் டுலவினர் போர்க்களம் புகுந்தனர் புரிந்தனர் அறப்போர் சேர்த்தனர் வெற்றி ஆர்த்தனர் வீரர் சென்னை மாந்தரை முன்னணி வீரரைச் சென்னி தாழ்த்தி வாழ்த்துவென் யானே அண்ணா அண்ணா வாழ்த்துக அண்ணா நண்ணார் நமக்கிலை நாடுநம் குறிக்கோள் மாநகர் நலம்பெற மாநக ராட்சியை ஏந்துக கழகம் என்றுநும் நாவால் வாழ்த்துக அண்ணா வாழ்த்துக பெரிதே. (மாநகராட்சித் தேர்தலில் கழகம் வென்ற போது பாடியது)

  • கறங்கு - காற்றாடி