பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

ஞாயிறும் திங்களும்



எதுகையுடன் மோனையெலாம் எழுந்தெ ழுந்தே எக்காளம் இட்டுநடம் புரியும் பேச்சு, புதுமையுடன் பழமையினைப் பிணைத்து வைத்துப் பொலிவூட்டிப் புத்துலகைப் படைத்துக் காட்டும் பொதுமைமிகுங் கருத்தலைகள் ஊறி ஊறிப் பொங்கிவரும் பேரூற்றை நினைவிற் கூட்டும் இதுவரையில் பேச்சரங்கம் கானா ஒன்றை இவன்பேச்சிற் கண்டெழிலைப் பெற்ற தன்றோ! மிகப்பெரிய பேச்சாளர் பேசும் போதும் மேவிடுவோர் தொகைமுன்பு நூற்றை எட்டும் அகத்தொளிரும் நம்தலைவன் பேச்சைக் கேட்க ஆயிரம்பல் லாயிரமாய்க் கூடக் கண்டோம் நகைச்சுவையும் மதித்தெளிவும் விரப் பாங்கும் நாடகமாய் இலக்கியமாய்க் கலந்து தோன்றும் பகைச்சுமையைத் தாங்கிகளும் தனித்தி ருந்து பாராட்டும் தமிழ்ப்பேச்சின் திறந்தான் என்னே! எழுத்துலகில் பேச்சுலகில் தாய்மொ ழிக்கோர் எல்லையிலாத் தனிமிடுக்கைப் படைத்து விட்டான், முழுத்திறமை கொண்டவன்றன் மொழித்தி றத்தால் முத்தமிழ்க்கோர் பரம்பரையைத் தோற்று வித்தான் வழுக்கிவிழும் விகடநடை கொச்சைப் பேச்சு வம்பர்தருங் கலப்புநடை எங்கே? எங்கே? அழுக்ககலச் செய்துவிட்டான் திருப்பு மையம் ஆகிநின்று தாய்மொழிக்குக் காவல் செய்தான். வடபுலத்து வெறிமனத்தர் கூடி நின்று வளர்மொழியாம் தமிழ்மொழிக்கு மாறாய் இங்குப் படபடத்த ஒலிஎழுப்பும் இந்தி தன்னைப் பரப்புதற்கு, வஞ்சகத்தால் புகுத்து தற்குப் படமெடுத்த பாம்பெனவே முனைந்து விட்டார் பதைத்தெழுந்து நம்அண்ணன் தமிழர் நாட்டுள் விடமறுத்தான் படையெடுத்தான் போர்தொ டுத்தான் வீரத்தால் தாய்மொழிக்குக் காவல் செய்தான்