பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

ஞாயிறும் திங்களும்



| காக்குந் தொழில் வல்லான் ) சிந்திக்க மாட்டாமல் சீரிழந்து நிற்கின்ற முந்தைத் தமிழ்நாட்டில் மொய்த்துத் துயர்ப்படுத்தும் கண்மூடிக் கோட்பாட்டைக் கட்டோடு சுட்டெரித்து மண்மூடிப் போக மறைத்துத் தொடர்த்திங்கு நல்ல அறிவூட்ட நாட்டை வளமாக்கத் தொல்லை இருளகற்றத் தோன்றும் சுடரிரண்டு ஒற்றைச் சுடர்தோன்றும் ஊரதுதான் ஈரோடு மற்றைச் சுடர்தோன்றி வாழிடமோ காஞ்சிநகர் தோன்றும் ஒருசுடர்க்குத் தொண்ணுறு மேவிவரும் ஆன்றதொரு செஞ்சுடர்க் காறுபத்து தாவிவரும் ஈரோட்டில் தோன்றுகடர் எந்நாளும் ஒய்வின்றிப் போராட்டஞ் செய்துவரும் பொன்றா நெருப்பாகும். காஞ்சிச் சுடரோ கனலாது காய்ந்துமன வாஞ்சைக் கதிரால் வளர்ந்துவரும் ஞாயிறது ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாயிரு ஞாலம் வளமுடன் வாழ்ந்திட ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றுதும் எண்ணும் மனத்தில் இனித்திருக்கும் நல்லவனாம் அண்ணன் புகழ்சொல்ல ஆயிரம் நாவேண்டும் பொன்றாப் புகழ்மணக்கும் புண்ணியன் நற்குணங்கள் ஒன்றா இரண்டா ஒருபொழுதில் பாடுதற்கு? தோற்றுவித்த கட்சி துவளாமல் காத்துவந்த ஆற்றலுக்கு நேர்சொல்ல ஆளொருவர் ஈங்கில்லை காளையரைக் கொண்ட கழகம் வளர்ந்துவிடின் நாளைநிலை என்னாகும் நாடே அவர்வயமாம் என்றஞ்சிப் பேரரசை ஏற்றிருந்த நல்லோர்கள் அன்று தடைச்சட்டம் ஆக்கி விடுத்தார்கள் போயிற்றுப் போயிற்றுப் பூண்டோடு போயிற்று வாயற்றுப் போயிற்று வாயேது கட்சிக்கென் றார்ப்பரித்து நின்றார் அரசியல் சோதிடர்கள் போர்ப்பயிற்சி நன்கு புரிந்திருக்கும் நம்அண்ணன்