பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 53

அந்த தேவதாசி ஒழிப்புக் கொள்கையில், முன வரிதை யில் முதல் பெண்ணாக நின்று அந்த இயக்கத்துக்கு ஆதர வாகப் பாடுமட்டார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.

அதே நேரத்தில் பால்ய விவாகம் என்ற பெயரால் இளம் வயதிலேயே திருமணத்தை நடித்தி, அவர்கள் கணவன் இறந்த பிறகும். இருக்கும்போதும், கணவன் மார்கள் இளம் பெண்களைக் கைவிட்டு விட்டு வேறு பெண்களுடன் ஈடுபட்டு, முதல் மனைவியை விபச்சாரத் திற்கு ஆளாக்குவதுமான கொடுமைகள் நடப்பதையும் டாக்டர் முத்துலட்சுமி கண்டார்:

ஆதனால், தேவதாசிகளை ஒழிப்பது மட்டும்போதாது, பால்ய விவாகக் கொடுமைகளையும் சேர்த்தே ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு டாக்டர் முத்துலட்சுமி வந்தார். பூவிழ்ந்து, பொட்டிழந்து விதவைக் கோலமாகக் கிட க்கும் பெண்களுக்கு விதவை மணம் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான்் பெண்ணினம் பெருமை பெறும்; பெண்கள் உரிமையோடு வாழ முடியும் மானமும் மரியாதையும் பெண்களுக்கு உருவாகும் என்பதையெலாம் சிந்தித்து, அதற்காக மக்கள் இடையே ஊர் ஊராகச் சென்று தேவதாசி ஒழிப்பு, பால்ய விவாகம் தடுப்பு, விதவா விவாகம் அனுமதிப்பு என்பவைகளைப் பற்றி முத்துலட்சுமி விலக்கிப் பேசி வந்தார்.

தேவதாசி ஒழிப்பு, பால்ய விவாகம் தடுப்பு என்பது குறித்துப் பேசி வந்த டாக்- மு.த்துலட்சுமியின் தொண்டு பெண்கள் இடையே ஒரு பெரும் விழிப்புணர்ச்சியை உரு வாக்கிற்று. பெண்ணினத்திடையே அவருக்குத் தனி யொரு மரியாதையும் மதிப்பும் நாளாகவாக உரு வாயிற்று.

தனது தொண்டால் பெண்ணினம் விழிப்புற்ற பிறகு,

அதை அரசுக்கும் அறிவித்துச் சட்டம் இயற்றச் செய்ய லாம் என்ற முடிவுக்கு வந்த முத்துலட்சுமி, அதற்கான