பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தாமரைத் தண் தாதிற்கும் சந்தனமரத் தேன் கூட்டிற் கும் அவைகளை அழைத்துச் செல்வதில்லை. தேன் கூட் டில் சேர்த்து வைக்கும் தேனை மற்ற உயிர்கட்குப் பகிர்ந்து அளித்தலும் இல்லை. 'ஆல்ை நண்டுகளாகவும் நாரைகளாகவும் உள்ள மக்களின் மனங்கள் தும்பிகளாக உயர்வ தற்கு இடம் உண்டு. புலமைத் தும்பிகள் இப் புதிய தும்பிகளைத் தாமரைத் தண்தாது ஊதும் போதும் அழைத்துச் செல்லும்; சந்தன மரத் தீந்தேன் தொடுக் கும்போதும் அழைத்துச் செல்லும். தொடுத்த தீந் தேனை உடனிருந்து நுகருமாறு அழைத்து மகிழும். தாம் இன்புறுவது உலகின் புறக் காணும் ஆர்வம். இந்தப் புலமைத் தும்பிகளுக்கு இயல்பாக உள்ளது' (ப. 57-58) என்ற வரிகளைப் பயிலும்போது காணும் உவமையும் விளக்கமும் நம்மை நாமே மறக்கச் செய்கின்றன. பின் பலவகையில் இப்பாடலின் உட் பொருளையும் அங்க மைந்த ஒப்பிடுமுறை முதலியவற்றையும் அதை அளந்தறி யும் ஆற்றலாம் கருவியையும் பிறவற்றையும் விளக்கி இறுதியாக இப்பாட்டினைப் பற்றிய முற்றிய கருத்தினைத் தெளிவு படுத்துகிருர். "இப் பாட்டு தோன்றிய நாள்முதல் பலர்க்கும் பலவகைக் கற்பனைகளையும் ஆராய்ச்சிகளையும் தூண்டிவரும் பழம்பாட்டு...தொடக்கக் காலம் முதல் இவ்வாறு கற்பனைக் களஞ்சியமாகவும் ஆராயச்சித் தூண்டுகோலாகவும் விளங்குவதால்தான் மிகச்சிறந்த பாட்டாக அன்றும் விளங்கியது; இன்றும் விளங்கி வருகின்றது" (ப. 71) இந்தப் புதிய கற்பனை உல கிலே, செந்நாப் புலவர்களே கொங்குதேர் வாழ்க் கைத் தும்பிகளாகக் காட்சியளிக்கின்றனர். கற்ப னையே சிறகு ஆகின்றது. இலக்கிய உலகமே சோலையாகின்றது" (ப. 72)