பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 'இன்று இப்பாட்டின் உயரிய கருத்துக்கள் மற்றப் பாட்டுக்களின் பெற்றியை ஆராய்வதற்கு உதவியாக நிற்கின்றன. ஆராய்ச்சிக்கு உரிய பொரு ளாக நின்ற பாட்டு ஆராய்ச்சிக்கு உதவும் கருவியாக நிற்கின்றது." (ப. 73) என்று இதையே கருவியாக - ஆராய்ச்சிக்கு உதவும் கருவி யாகக் காட்டித் தம் நூலை முடிக்கின்றர். இந்நூல் முழு வதையும் ஆரத் துய்த்துத் தம்மை மறந்து பயின்ருலன்றி இவர்தம் திறய்ைவின் தெளிவையும் விளக்கங்களையும் புதுமை காணும் தன்மைகளையும் உணரமுடியாது. இதே வகையில் அமைவது மற்றெரு நூலாகிய ஒவச்செய்தி". இது குறுந்தொகைப் பாட்டினைப் பற்றியது; அதுவோ நெடுந்தொகைப் பாட்டிற்குரியது. அதன் நலத்தையும் சிறிது காண்போம். "இந்த அளிநிலைபொரு அது அமரிய முகத்தள் என்று தொடங்கும் அகநானூற்றின் ஐந்தாவது பாட்டு இவர் உள்ளத்தை எவ்வெவ்வாறு தொட்டு உலுக்கி உள்ளது என்பதைத் தம் சிறு நன்றி உரையிலேயே முதலாவதாகக் குறிப்பிட்டுள்ளார். "ஒரு பாட்டு: அதைக் குறித்துப் பலநாள் போராட்டம்; இரண்டு நாள் இரவும் பகலும் ஏக்கம், மூன்ரும் நாள் வேலத்து மலையை அடுத்த அழகிய ஒடையில் உலவும்போது எதிர்பாராத விளக்கம்; நல்ல தெளிவால் பிறந்த பேருவகை - இவையே இந்நூலாக உருப்பெற்றது.” என்று முன்னுரையில் இந்நூல் தோன்றக் காரணமாயும் செயலாயும் அமைந்தவற்றைச் சுட்டிக்காட்டி விடுகிருர். வேலம் இவர்தம் சொந்த ஊர். இந்த ஊரின் பக்கத்தில் ஒரு மலையும் அடுத்து ஒரு சிற்ருேடையும் உண்டு. ஊரில் தங்கும் நாட்களிலெல்லாம் அந்தப் பக்கம் மாலை வேளை களில் இவர் தவருது செல்வது வழக்கம். நான் சென்று தங்கிய ஓரிரு நாட்களில்கூட, என்னையும் அழைத்துக்