பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 தலைவி மெலிய, அவளுடைய கைவளைகள் உடனே கழலும், தலைவன் நீங்கியதும் பசலை வந்து பரவும்; அவன் வந்ததும் பசலை விலகும். இவை போன்ற உயர்வு நவிற்சிகள் அறிவை மருட்டும் தகையன அல்ல; தாலாட்டிக் தூங்க வைப்பன எனலாம். நனவுலகத்திலிருந்து கற்பனை உலகத்திற்குச் செல் வதற்கு ஒருவாறு உதவுவன இவை". (ப. 10) "இத்தகைய கற்பனையுலகில் திளைத்து இன்புற வேண்டுமாயின், ஆராய்ச்சி அறிவை ஒரளவு விட்டு, விளையாடும் மனப்பான்மை பெற்ருல்தான் முடியும்; அஃறிணை உயர்திணை இயங்குவன இயங்காதன. முதலான வேறுபாடுகளையும் ஓரளவு மறந்தால்தான் முடியும்”. (ப. 13) இவ்வாறு முன்னுரையில் சுட்டிய இவர் நூலுள் பல பாடல் களைப் பதினைந்து தலைப்புகளில் நன்கு விளக்கி நாமெலாம் அச்செல்வத்தைத் துய்த்துப் பயன்பெற வைக்கிருர். இவ்வாறே நெடுந்தொகைச் செல்வமும் அமைந் துள்ளது. அதன் முன்னுரையும் முன் கண்ட குறுந்தொகை முன்னுரையின் அளவே பனிரெண்டு பக்கங்கள் விரிந் துள்ளன. "கதைகளையும் காவியங்களையும் கற்பவன் அவற்றில் வாழும் மாந்தர்களின் உலகத்திற்கே சென் ருகவேண்டும். தன்னை இழந்து கற்கவேண்டும்;தான் கலந்து கற்கவேண்டும், கதைகளிலும் காவியங்களி லும் உள்ள இன்ப துன்ப உணர்ச்சிகளையெல்லாம் தான் உட்ற்றிடல் வேண்டும்." (ப. 4). "தன்னை மறப்பதோடு அமையாமல் தன்னை இழந்து கதையின் உணர்ச்சிகளிலும் காவியத்தின் 8 -