பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 உணர்ச்சிகளிலும் கலந்து உணர்தலே, இவற்றைக் கற்கும் முறையாகும்." (பக். 7), "கதையும் காவியமும் கற்பவர்க்குக் கண் மட்டும் போதாது; செவியும் போதாது. சொற்கள் வாயிலா கவே கதை உலகத்திற்கும் காவிய உலகத்திற்கும் செல்ல வேண்டும். அந்தச் சொற்களின் பொருளை அறிந்திட மூளையின் உதவி வேண்டுவதாக உள்ளது. அறியாத சொற்களின் பொருளை அறிவதற்கு உழைப்பு வேண்டும்." (ப. 8). 'காவியம் கற்கத் தொடங்குவார்க்குச் சொல்லா ராய்ச்சியும் வரலாற்று ஆராய்ச்சியும் துணைக்கருவி களாக அமையும், கற்றுப் பயின்றபின், அந்தக் கருவி களை மறக்கும் நிலை எய்தல் வேண்டும்.' (பக். 10). 'நாடகம் முதலில் கலைகளில் உள்ள உணர்ச் சியை எய்த வேண்டுமானல், வாழ்க்கையில் நிறைந்த அனுபவம் இன்றியமையாதது." (ப. 12) என்று நெடுந்தொகைச் செல்வத்தின் நீண்ட முன்னுரை யில் பொதுவாக இலக்கியத்திறன் காண்பார்க்கு அமைய வேண்டிய பண்புகளையும் பயனையும் விளக்கிக் காட்டு வதை ஈண்டு எண்ணல் வேண்டும். இவ்வாறே நற்றிணைச் செல்வத்தில் இவர் கூறும் சில திறய்ைவு முறைகளைக் கண்டு அமைவோம். "இலக்கிய விருந்து நுகர்வோர், பயிற்சி பெற்ற வராக இருத்தல்வேண்டும். உவமைகள், வருணனை கள், சொற்பொருள் நயம் முதலிய இலக்கியச் செல் வங்களைத் திரும்பத் திரும்பக் கற்றுப் பயின்ற பயிற்சி, அந்நுகர்ச்சிக்கு உதவியாகும்." (ப. 3) "பாட்டுக் கலைக்கு உயிர், உணர்ச்சிச் சிறப்பு: உடல், கற்பனை வளம்; உடை, ஒலிநயம்;இப்பாட்டுக்