பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு 3 மு. வ. வின் வழிகாட்டிகள் இரண்டு நாட்களிலும் மு.வ. அவர்கள் பலருடைய நூல்களைப் பயின்றும் சிலருடன் நெருங்கிப் பழகியும் அவற்றையும் அவர்களையும் வழிகாட்டிகளெனக் கொண்டு தம் நூல்களை எழுதினர் எனக் குறித்துள்ளேன். எனவே அவர் பச்சையப்பர் கல்லூரியில் பணியாற்றிய போது நூல் நிலையத்திலிருந்து எத்தகைய நூல்களை எடுத்துப் பயின்ருர் என்பதை ஒரளவு சுட்டிக் காட்டவே கீழே உள்ள நூற் பட்டியலைத் தந்துளனேன். (இவைகளையன்றி வேறு இலக்கண இலக்கிய நூல்கள் பலவும் பாடம் நடத்துவதற். கெனவும் ஆய்வுக் கெனவும் எடுத்துப் பயன்படுத்தி யுள்ளார்.) இந்த நூல்களைத் தவிர்த்து காண்டேகர் நாவல்கள், எச்.ஜி. வெல்ஸ், பெர்னுட்ஷா போன்ருர் தம் நூல்கள், இலக்கியத் திறனுய்வு, மொழி வரலாறு பற்றி எழுதிய ஹட்சன், புரும்பீல்டு, யெஸ்பர்சன் போன்ருேர் நூல்கள் ஆகியவற்றைத் தமக்கெனவே சொந்தமாக வாங்கி வைத்துக் கொண்டிருந்தார். இவர் அதிகமாக நூல்கள் எழுதத் தொடங்கிய 1945, 1946 ஆகிய ஆண்டுகளிலும் அக்கால எல்லைக்குப் பத்தாண்டுகள் கழித்து, 1957, 1958 ஆகிய ஆண்டுகளிலும் இவர் நூலகத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்திய நூல்களுள் சிலவற்றை மட்டுமே இங்கே இனைத்துள்ளேன். (பிற வேண்டுமாயின் பச்சையப்பர் கல்லூரியின் நூல் நிலையத்தில் காணலாம்.) -