பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கருத்துக்களை உள்ளிடாக்கி இந்த நாவல்களாகிய,வெல்ல உருண்டைக்குள் அவற்றை அமைத்துத்தந்தால் சமுதாய மாசு நீங்காதா என்று எண்ணி இவ்வாறு செய்வதாகக் கூறுவார். எனவேதான் இவர்தம் நாவல்கள் சிலவற்றில் கதைப் போக்கினைவிட - கற்பனையைவிட - இத்தகைய உபதேசங்கள் அதிகமாக இருக்கக் காண்கிருேம். மேலும் சுற்றிப் பறந்து வரும் குருவிகளும் இவர் வீட்டின் பக்கத் தில் வளர்ந்த முருங்கை மரமும் இவர் நாவல்களில் இடம் பெறும். இவற்றுடன் சென்னை போன்ற நகரங்களின் ஆர வார ‘நாகரிக வாழ்வும் கிராமப்புற அமைதி வாழ்வும் காட் டப் பெற்று, நகர வாழ்வின் சிக்கல்கள் நன்கு புலப்படுத் தப்பெறும். இவ்வாறு இவர்தம் சுற்றுச் சார்புகளை எண்ணி எண்ணியே இவர்தம் நாவல், சிறுகதை போன்றவற்றை ஆக்கியுள்ள தன்மை எல்லா நூல்களிலும் நன்கு விளக்க முறும். எனினும் நான் இங்கே ஒரிரு நூல்களை எடுத்துக் கொண்டே அவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதல் நாவல் இவருடைய முதல் நாவல் 1948இல் வெளிவந்தது, எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 45-46இல் இது எழுதப்பெற்றது. நான் கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருந்தபோது, அந்த வீட்டில் இருந்து கொண்டுதான் இந்த முதல் நாவலை இவர் எழுதி முடித்தார். முடித்ததும் தம்மிடம் பயின்ற மாணவர் ஒரிருவரை அந்த வீட்டிலே விடுமுறையில் வரச்செய்து, அதைப் படித்துக் காண்பித்து, பிறகே அதை வெளியிட ஏற்பாடு செய்தார். இந்த நாவல் தொடக்கத்திலேயே முருங்கை மரமும் கிளிகளும் படித்தவர்க்கு என்ற தலைப்பில் இடம் பெறுகின்றன. "அந்த முருங்கை மரத்திலிருந்து இரண்டு கிளிகள் ஒன்றன்பின் ஒன்றக எழுந்து பறந்தன. அவை தென்னை மரத்தில் சென்று ஒலையில் மறைந்திருந்தன. உடன்ேசிறிது நேரத்தில் வெளிவந்தன.