பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 "காற்று ஆரவாரம் செய்தபோது இந்தக் கிளிகள் எங்கே இருந்தனவோ தெரியவில்லை. இப்போது பழையபடி வந்துவிட்டன. தென்னை மரத்தைச் சுற்றுகின்றன. "ஆறு கிளிகள் இருக்கின்றன. ஆறு கிளிகள் - மூன்று குடும்பம்-மூன்று இணை. எது எதன் இணையோ தெரியவில்லை. பொறுத்துப் பார்ப்போம். எப்படியும் தெரிந்துவிடும்." இந்தத் தொடர்கள் நூலுக்குள் வருவனவே. எனினும் நூலுக்கு முன்பே படித்தவர்க்கு என்று தலைப்பிட்டு இவற்றை மு. வ. காட்டி இருப்பதன் நோக்கம் இந்தக் கிளிகளும் மரங்க ளும் இவரை ஆட்கொண்டமையே, இவை பாத்திரங்களைச் சுட்டும் வகையிலும் (பக், 35, 77, 78, 79) அமைகின்றன என்ருலும், இந்த நாவல் உரு வாகும் நிலையில் இவர் உட்கார்ந்திருந்த மேல் வீட்டுச் சன்னலை ஒட்டியிருந்த முருங்கை மரம், தூரத்தே இருந்த ஒற்றைத் தென்னை மரம், அவற்றில் கீச்சிட்டுப் பறந்து பறந்து வந்த கிளிகள் ஆகியவையே அடிப்படையாக அமைந்தவை என்பது அன்று இவருடன் இருந்தவர் களுக்கே புலகுைம். கிளிகள் போன்று (ஆணும் பெண் னும் இயைந்து) மனிதன் தன் மனைவியுடன் ஒன்றி வாழ வில்லையே என்ற ஏக்கம் மருதப்பன் வாயிலாக வெளிவரு வதை நன்கு காண முடியும் (பக். 46). அப்படியே குழந் தையை ஒட்டி அவர்தம் வாழ்வு ஒன்றி இணைவதை எண் னும்போது இவருக்குத் தம் கண்முன் கிளிகள் தென்னை மரத்தைச் சுற்றி ஒற்றுமையாகப் பறப்பது தெரிகிறது ( பக். 48 ) இந்த நூலில் இவர் மூட நம்பிக்கையைச் சாடும் இடங் கள் பல. போலிச் சாமியார்கள் தன்மையினையும் பக். 10-13) சோதிடத்தால் வரும் தொல்லையினையும் (பக்.23) மூட நம்பிக்கை பற்றியும் (பக். 24-28), பல்லி சொல்வது.