பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 "நானும் என்னுடைய ஆபீஸ் கிளார்க்குகளின் செய்தியைச் சொல்லலாம் என்ருல், அவை சுவையற். றவை. யந்திரங்களின் வாழ்க்கையில் - பேணு ஒட்டும் வாழ்க்கையில் - என்ன சுவை இருக்க முடியும்? ஒரு கால் சுவைபடும் குறிப்பு ஏதாவது இருந்தாலும், அதை நான் ஒரு ரிப்போர்ட் ஆக்கிக் கூற முடியுமே தவிர. பத்திரிகை ஆசிரியர் போல சுவை கெடாமல் எழுதி வெளியிடவும் முடியாது. பள்ளிக்கூட ஆசிரியர்போல் தெளிவாகச் சொல்லவும் முடியாது. ஆகையால் ஏதா வது பேசவேண்டுமே என்று எண்ணி என் அன்னை யைப்பற்றியே பேசத் தொடங்கினேன்.” (செந். ப.91) என்று இளங்கோவின் சொல்லாக இவர் தம் உள்ளத்தை யும் வாழ்வையும் எடுத்துக் காட்டிவிட்டார். இவருக்குப் பத்திரிகை ஆசிரியராகவும் விருப்பம் ஒருகால் இருந்தது. இதைத் திரு. வி. க. அவர்கள் ஒருமுறை சுட்டியுள்ளார் எனினும் பள்ளி ஆசிரியராக - கல்லூரி ஆசிரியராக இருந்துகொண்டு பல பத்திரிகைகளுக்கு அந்த ஆசிரியர் கள் செய்யும் தொண்டுகளுக்கு மேலாக, எண்ணற்ற கட் டுரைகள் எழுதிவிட்டார். பத்திரிகை ஆசிரியர் சுவைபட எழுதவேண்டிய இன்றியமையாமையையும்பள்ளியாசிரியர் எடுத்த பொருளைத் தெளிவாக விளக்கவேண்டிய முறை மையினையும் சுட்டிக்காட்டிய இவர், அவ்வாறு இருவகை யிலும் சிறந்து வாழ்ந்தார் என்பதைத் தமிழுலகம் நன்கு அறியும். இத்தகைய குறிப்புகள் பல இவர்தம் பிற நாவல் களிலும் உள்ளன. 'குறித்த நாளுக்கு முன்பே ஆராய்ச்சிக் குறிப்பு களைத் திரட்டி ஒழுங்குபடுத்திக் கொண்டேன். தடை இல்லாமல் பேசத் தக்கவாறு சிறு தலைப்புகளையும் குறித்துக்கொண்டேன்' (கள்ளோ காவியமோ, பக். 147 ). என்று கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாநாட்டுக்கோ பிற கூட் ட்ங்களுக்கோ போகும்போது எவ்வாறு பேசப்பெறும் பொருள் பற்றிய குறிப்பை அமைத்துக்கொள்ள வேண்