பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 டும் என்று அருளப்பர்' என்னும் பாத்திரத்தின் வாயி லாகச் சுட்டுகிறர். மு. வ. அவர்களும் எங்கே பேசச் சென் ருலும் இந்த வகையில் ஆய்ந்து குறிப்பெடுத்துக்கொண்டு போவது வழக்கம். பாத்திரப் படைப்பு இவர்தம் நாவல்களிலும் பிற நூல்களிலும் இவரொடு கலந்தவர்தம் பெயர்களைப் பாத்திரங்கள் வாயிலாகவும் நேராகவும் வெளியிடுவார். உற்ற நண்பர்களைப் பற்றிய விமரிசனமாகவும் அதேவேளையில் நடந்த நிகழ்ச்சிகள் உண்மையெனக் காட்டுவனவாகவும் அவை அமை வதைக் காணலாம். இரண்டொரு சான்று காண்போம். இவர் பச்சையப்பரில் பணியாற்றியபோது உட னிருந்த ஆசிரியருள் திரு. மகாதேவன் தத்துவப் பேராசிரி யராக விளங்கினர். அவரிடம் இவர் ஈடுபாடு கொண்டார். அவர்தம் மணமாகாத எளிய பண்பட்ட வாழ்வைப் பல முறை பாராட்டியுள்ளார். அவரிடம் பயின்ற மாணவராக ஒரு பாத்திரத்தையும் படைத்து, அப்பாத்திரத்தின் வழியே ஒரு சில உண்மைகளை இவர் வெளியிடுகிரு.ர். "திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை நடத்திவிடலாம் என்று பலமுறை முடிவு செய்ததுண்டு. அது பொருத்தமான முடிவுதான். என்னைப்போல் அமைதியை விரும்புகிறவர்களுக்கு இந்தக் காலத்து ஆரவாரப் பழக்கம் இல்லாமல் போகிறது. ஆனல் உலகமோ ஆரவாரம் நிறைந்தது. ஆதலால் உலகத் திற்குக் தகுந்தவாறு ஆரவாரம் இல்லாதவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது. வருகின்ற மனைவி எந்தப் போக்கில் பழகியிப்பாளோ? நல்லவளாக இருந் தாலும் சுற்றுப்புறம் கெடுத்துவிடுவது இயற்கை. ஆகையால் திருமணம் செய்து கொள்ளாத தனிவாழ்க் கை நல்லது என்றே பல நாளாக எண்ணித் துணிந் திருந்தேன்.