பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பேராசிரியர் மகாதேவனிடம் படித்ததால் பல உண்மைகளைக் கற்றுக் கொள்ள முடிந்தது. தத்துவப் பாடமாக எடுத்துக் கொண்டு எம். ஏ. படிப்பவர்கள் அவற்றைக் தெரிந்து கொள்ளா விட்டால் பயனில்லை. அவற்றை உண்மையென்று நம் நாட்டுப் பெரியவர் எத்தனையோ நூற்ருண்டுகளாக எடுத்துக் கூறிவரு கிருர்கள். ஆனல் கற்றவர்களாவது அந்த நெறியில் நிற்க வேண்டாவா." (செந். 111-112) என்று திருநாதன் வாக்காக மு. வ. பல உண்மைகளை உணர்த்திவிட்டார். பேராசிரியர் மகாதேவனுக்கு ஏற்றம் தருவது மட்டுமன்றி, மணவாழ்வு அமைய வேண்டிய வகையினையும் சுட்டுகிருர். (இதுபற்றி வேறு நூல்களிலும் இந்நூலிலும் பலப்பல வகையில் விளக்கம் தந்துள்ளார்.) இதில் மேலும் கற்க, அதற்குத் தக நிற்க' என்ற உண்மை நெறியினையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. மு. வ. அவர்கள் இவ்வாறே உற்ற நண்பர் பலர் பெயர்களையும் அவருடைய சுற்றத்தார் பெயர்களையும் எடுத்தாளுவதில் இன்பம் காண்பவர். யான் கண்ட இலங் கையில் இவர் இவ்வாறே சிலர் பெயர்களை எடுத்தாளு வதைக் காணலாம். அவருடன் இலங்கைக்குச் சென்றவன் நான். இலங்கைச் செலவு பற்றி இவர் நூல் எழுதப் போவ தாகச் சொன்ன போது, அதில் என் பெயரைக் குறிப்பிட வேண்டா என்று கேட்டுக் கொண்டேன். எனவே அதில் 'நண்பர்’ என்று பலவிடங்களில் என்னைக் குறித்துள்ளார். ஆயினும் என் மகள் மங்கையர்க்கரசியைப் பற்றிப் பல விடங்களில் தன் மகன் அரசுக்குக் கடித வாயிலாக எழுதிய அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். ஒர் இடத்தை மட்டும் இங்கே குறிக்கிறேன். "பெரியவர்கள் ஆகிய நாங்கள் மட்டுமல்ல, நம் மங்கையர்க்கரசியும் அஞ்சாமல் கலங்காமல் கடல் காட்சியையும் மலை ஆறு முதலிய காட்சிகளையும் பார்த்துவந்தாள். மங்கையர்க்கரசி உன்னைவிட நான்கு