பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மிட்டிருந்தார், எனினும் நான் அவற்றைப் பெற வாய்ப்பு இல்லாமலேயே இவர் வாழ் நாள் முடிந்தது. இவர் சுட்டிய சில பாத்திரங்கள் இன்றும் வாழ்கின்றர் கள். மலர் விழியில்(ப.55-57) சில நிகழ்ச்சிகள்வருகின்றன. அவற்றுள் வரும் பாத்திரங்களும் செயல்களும் கற்பனை அல்ல என்பதை இவரே என்னிடம் சொல்லியுள்ளார். அவருள் சிலரும் இன்று வாழ்ந்து கொண்டு தான், இருக்கிறர்கள். அப்படியே அம் மலர்விழியில் குறிக்கப் பெறும் திருக்கழுக்குன்ற நாகசுரம் (ப. 38) உண்மையில் இவரை ஆட்கொண்ட ஒன்று. அந்த இசையில் இவர் பெரிதும் கட்டுண்டார். நானும் அவரும் கோயிலுக்குச் சற்றே தொலைவிலுள்ள சத்திரத்தில் சில நாட்கள் தங்கி யிருந்த போது, ஒருநாள் மாலை அச்சத்திரத்தின் திண்ணை யில் நாங்கள் இருக்க, அப்போது எழுந்த அந்தத் திருக் கோயிலின் நாதத்தில் ஈடுபட்டு, அதன் இனிமையை அன்று இவர் போற்றிய நிலை இன்றும் என் கண்முன் நிழலிடு கின்றது. தான் வாழ்ந்த சேத்துப்பட்டுக் கந்தப் பிள்ளைத் தெருவினை - தன் நூல்கள் பல உருவான அந்தத் தெரு வினைச் செந்தாமரையில் (ப. 85) குறித்துள்ளார். பொன்னெனப்போற்றியவை இவ்வாறே இவர் ஈடுபாடு கொண்டு பயின்ற நூல்கள் உளத்தால் போற்றிய நல்ல சமயத் தலைவர்கள், சான் ருேர், பெரியவர் ஆகியோர்களை யெல்லாம் பல நாவல் களில் பாத்திரங்கள் வாயிலாக நன்கு நமக்கு நினைவூட்டு கின்ருர். அவற்றில் எவ்வாறு ஈடுபட்டு நின்ருர் இவர் என்பது இவரொடு பழகியவருக்கு நன்கு தெரியும். 'திலகம் உள்ளொளி படித்துக் கொண்டிருந்தாள்' (செந். ப. 98) என்று தாம் திரு. வி.க.வின் உள்ளொளியில் கொண்ட ஈடுபாட்டை விளக்குகிருர், பெண்ணின் பெரு மையை மலர்விழியில் சுட்டிக் காட்டுகிருர் (ப.28). நவசக்தி அகல்விளக்கில் (311) சுட்டப்பெறுகிறது. 'குற்றம் உணர் வான் குணவான்’ என்று அந்த நமச்சிவாய முதலியார்