பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. புத்தகத்தில் இருக்கும் பாடம் இவர்கள் படித்ததில்லையோ என்று மற்ருெரு பாத்திரத்தின் வழி (செந். 142) கா. நமச்சி வாய முதலியார் எழுதிய நூல்களை நமக்கு நினைவூட்டு கின்ருர். பர்னட்ஷாவின் வாக்கியங்கள்-சொன்னவை அனைத்தும் வாழ்வில் உண்மை என்பதைச் (கள்ளோ-ப. 76-77) சுட்டிக் காட்டுகிறர்.திருக்குறளை ஆங்காங்கே பலப் பல விடங்களில் தொட்டுக் காட்டுவதோடு (கள். 75) அந் நூலில் பயின்று பலர் வாழ்வில் திருத்தம் பெற்றதையும் சுட்டத் தவறவில்லை. பெரும்பாலும் புராணங்களை மு.வ. அவர்கள் நம்புவது இல்லை. என்ருலும் வர்ய்மையைக் கடைப்பிடிக்கும் வாழ்க் கையை மேற்கொண்டதனால் அரிச்சந்திர புராணத்தில் மட்டும் அதிகப்பற்று வைத்திருந்தார். அண்ணல் காந்தி அடிகளார் அரிச்சந்திரன் கதையால் தெளிவுற்றமையும் இவருக்கு அவ்வரலாற்றில் பற்று உண்டாகக் காரண மாகும். எனவேதான் அரிச்சந்திர புராணத்தில் ஒரு பாடலை யே எடுத்துக் காட்டி அந்தப் பாடலைப் பாடிய பாத்திரம் கண்ணிர் ததும்பிய நிலையினையும் (பாவை ப. 71) சுட்டிக் காட்டுகின் ருர். அது மட்டுமன்றி நாள்தோறும் அரிச்சந்திர புராணம் படித்தால் மனம் உறுதிப்படும் என்று நான்காம் வகுப்பில் படித்த போது அவர் ஆசிரியர் சொன்னராம் (ப. 72) என்று பாத்திரத்தின் மேலேற்றித்தன் சொந்த அனுபவத்தையே சொல்லுகிருர். உலகுக்கு அறிவுறுத்துவது போன்று-மாணவர்களுக்கு அறிவுறுத்துவது போன்று மு. வ. அவர்கள் சில நூல்களைக் கட்டாயம் படிக்கவேண்டும் என வற்புறுத்துவர். கலெக்டர் செல்வநாயகம் வழியாக (மலர் ப. 28) தம்பி’ நீ பத்தாவது படித்திருக்கிருய் அல்லவா? போதும், தமிழில் திருக்குறள், புறநானூறு ஏதாவது படித்து வா, ஆங்கிலத் தில் தாகூர், டால்ஸ்டாய் படித்து வா. அதன் பயன் இப் போது தெரியாது. என்னைப் போல் வயதான பிறகுதான் தெரியும். முதலில் தொல்லையாகத்தான் இருக்கும். இருந்