பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 "தந்திரத்தால் ஏமாற்ற முயற்சி செய்யாதே. எப்பொழு தும் நேர்மையாகிய தற்காப்பு தேடிக்கொள். தந்திரத்தை நீ கையாண்டால் உன்னைவிட வல்லவர்களின் தந்திரத்துக் குப் பலியாகி விடுவாய்.” (கள். பக். 174) "தேர்தலில் நின்று பணம் தொலைவது நல்லதுதான். அதை எண்ணில்ை தேர்தலும் வேண்டியதே. கெட்ட செல்வர்களின் செல்வாக்தை அழிப்பதற்கு அது உதவி யாக இருக்கிறது." (மண். ப. 76) 'தனக்கு ஆகாதவர்கள், ஆகாதவர்களைச் சேர்ந்தவர் கள் இவர்களின் வழக்கு வந்தால் வேண்டுமென்றே கடுமையாகத் தண்டிக்கிருன். வேண்டியவர்கள் தப்பே செய்தாலும் அவர்களை விட்டுவிடுகிருன். அந்தப் பதவி யில் இருப்பதால் போலீசாரின் துணை இருக்கிறது." (கெளரவ நீதிபதியின் கொடுமை பற்றி-மண், ப. 77) 'இன்றுள்ள சமுதாயம் மண் குடிசை போன்றது. அதில் எலிகள் வளைதோண்ட முடிகின்றது. பெருச்சாளி கள் கடைக்காலையே தோண்டுகின்றன. பலவகைப் பூச்சி களும் குடிபுகுகின்றன. எல்லாம் சேர்ந்து குடிசையைப் பாழாக்க முடிகின்றது." (மண்.477, நூலின் பெயர்கக்கார ணம் புலப்படுகிறது.) சாவு என்பது வாழ்வுக்குத் தேவையானது. சாவும் வாழ்வும் சேர்ந்தால் வட்டம். இது இல்லையானல் அது இல்லை. இலை பழுத்து வாடி உதிர்ந்தால்தான், தளிர் பசுமையாகத் தோன்றுகின்றது. பழுப்பதும் தழைப்பதும் போலத்தான் சாவும் வாழ்வும்." (மண். 95. இது உண்மை யாக உணர்ந்ததோடு, கடைசிக் காலத்திலும் சாவுக்கு இவர் கலங்காமலே இருந்தார்.) "வழிபாட்டால் பயன் உண்டு. மனம் அமைதி பெறு கின்றது; வலிமை பெறுகின்றது. நானே உணர்ந்து கொண் டேன்." (மண். ப. 429-இவர் வழிபாடாற்றுபவர்).