பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 'உறக்கம் வாராத நோயாளிகள் போகவில்லை. உறங்கத் தெரியாத செல்வர்கள் போகவில்லை. துணிகளை அடுக்கி வைத்திருக்கும் பேறு பெற்றவர்கள் போக வில்லை...பொன் நகைகளை உடம்பெல்லாம் அணிந்த வர்கள் போகவில்லை. உயர்ந்த சாதி என்று தங்களை எண்ணிக் கொள்ளுகிறவர்கள் போகவில்லை. உழைத்து வியர்வை விடும் மக்களோடு உழைப்பில்லாமல் உண்டு வாழும் பேறு பெற்றவர்கள் சேரலாமா?' (பாவை. ப. 18குருவிக்காரர் நாட்டுப்புறப் பாடல்களுக்கும் ஆடலுக்கும் செல்லாத மக்களைப் பற்றிக் கூறி அவர்தம் செருக்கின் நிலையை விளக்குகிறர்.) "நாட்டுப் புறங்களில் உண்மை பேசுவது ஒரு நல்ல பண்பாக விளங்கிலுைம் நகரங்களில் மக்களைக் கெடுக் கும் பண்பு என்ருல் அது ஒன்றுதானே. உள்ளொன்று வைத்து வெளியே அதனைக் காட்டாமல் வாழத் தெரியாத மக்கள் நகரங்களில் இடர்ப்படுவதும் அதனுல்தானே.” (பாவை 44, இதில் நகர வாழ்க்கையின் தன்மையை விளக்குகிருர்.) "நாட்டுப்புறத்தில் கண்மூடி வாழ்வுக்கும் செல்வாக்கு உடையவர்களுக்கும் சாதி வழக்கங்களுக்கும்தான் இட முண்டு.' (பாவை, ப. 137) "அவரவர்களின் மனைவிமாரின் பட்டாசையையும் பொன்னசையையும் ஆடம்பர மோகத்தையும் தீர்ப்ப தற்குத்தான் ஆண்கள் லஞ்சம் வாங்கி உலகத்தைக் கெடுக்கிருர்கள்." (மலர். ப. 88) 'அவன் தேடி வாழும் பெண் யாராக இருந்தாலும் எனக்கு மருமகளே. அவனுடைய வாழ்வுதான் எனக்குப் பெரிது. அதற்கு என்னல் இடைஞ்சல் இருக்கக்கூடாது.” (பாவை. ப. 91) "நீ சொல்வது கருநாடகப் பேச்சு. இப்போதுதான் பத்தாவதுக்கு மதிப்பில்லாமல் செய்து விட்டார்களே.