பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பி.ஏ., எம்.ஏ.க்கள் நம்மோடு போட்டி போட்டுக் கிளார்க் வேலைக்கு வரும்போது நமக்குக் கதி ஏது? ...பத்தாவது படித்தவர்களுக்கு வாழ்வு கிடைக்க வேண்டுமானல் இந்தப் பட்டதாரிக்குத் தடை ஏற்படுத்தினுல்தான் முடி யும்?" (மலர். ப. 40.) சர்வீஸ் கமிஷன் தேர்வுமுறை பற்றி அடிக்கடி குறை கூறுவர்-உண்மையும் அதுதான்). 'ஒன்று மாமன் மைத்துனன் பெரிய உத்தியோகத் திலிருந்து நமக்குச் சிபாரிசு செய்யவேண்டும். அல்லது அப்பன் பாட்டன் சேர்த்து வைத்ததில் ஒரு பங்கு லஞ்ச மாவது கொடுக்க வேண்டும்." (மலர், ப. 44) "பணவேட்டை ஆடும் சமுதாயம் நல்லவர்களுக்குத் தானே தொல்லை கொடுக்கிறது." (மலர், பக்.58) 'என்றும் உழைப்பாளிகளை நம்பி உழைப்பாளிகளைப் போல் எளிய வாழ்வு வாழவேண்டும். இல்லையானல் போகப் போகத் தொல்லைப்படுவார்கள்." (மலர், ப. 85) 'நாவல் படித்தால் காதல் தொடங்கும் என்று பலர் காண்கிருர்கள். டிக்கெட் வாங்கிவிட்டால் ரயிலில் இடம் கிடைப்பது போலத்தான் நாவலும் காதலும் என்று பலர் எண்ணி ஏமாறுகிருர்கள்." (மலர், ப. 108). அந்த நாளில் ரயிலில் இடம் கிடைப்பது எளிதாக இருந்தது. "எழுந்ததும், தெருக்கதவைத் திறக்காமல் தோட்டத் துக் கதவைத் திறக்கக் கூடாதாம்...சாஸ்திரமாம்... தோட் டத்துக் கதவை முதலில் திறந்தால் வீட்டு லட்சுமி தோட் டத்து வழியாகப் போய்விடுவாளாம்.” (மலர். ப. 112) 'மனைவிக்கு உரிமை கொடு. உரிமையால் தீமை நேர்ந்தாலும் கவலைப் படாதே. இரண்டு மூன்று குடும்பங் க்ள் உரிமையால் கெட்டாலும் தமிழ்நாடு சீர்ப்படும்." (மலர், ப. 128) "அமெரிக்காவில் எத்தனை அங்குலம் ஆடை உடம் பில் குறைகிறதோ அவ்வளவுக்கு நடன மங்கையர்க்குப்