பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 பணவருவாய் பெருகியது. அங்குலத்துக்கு இத்தனை ஆயிரம் என்று கணக்கெடுக்கலாம் போல் தெரிகிறது.” (மலர். ப. 150) 'பெண்கள் எப்போதும் இரண்டுபேர் ஒத்து வாழ மாட்டார்களோ, மாமியாராக இருந்தாலும் பிடிக்கவில்லை; வெளியாராக இருந்தாலும் பிடிக்கவில்லை." (மலர். 173) 'கணவன் மனைவியொடு கைகோத்துத் தெருவில் போவதைக் காணப் பொறுக்காத நாடு இது. மகனும் மரு மகளும் பகலில் பேசுவதைக் கேட்கப் பொறுக்காத மாமியார்கள் மலிந்த நாடு இது." (மலர். ப. 183) "இங்கே வைத்தியத்துக்குப் பணம் இல்லை. இருந் தாலும் வேலைக்காரருக்குப் பணம் கொடுக்காவிட்டால் தரும ஆஸ்பத்திரியிலும் ஒன்றும் நடக்காது. பணம் இல்லாவிட்டால் வேளைக்கு மருந்தும் கொடுக்க மாட்டார் கள். தரவேண்டிய கஞ்சியிலும் ரொட்டியிலும் பாதி எடுத் துக் கொண்டுதான் கொடுப்பார்கள்.” (மலர். 186. பலரைக் காண ஆஸ்பத்திரிக்குச் செல்லும்போது அடிக் கடி சொல்லுவார்கள்). "மற்றப் பெண்களின் மேல் நாட்டமுள்ள கற்பு இல் லாத ஆண்கள் என்றைக்குப் பார்த்தாலும் பூவும் கையு. மாகத்தான் வீட்டுக்குள் நுழைவார்கள்." (மலர், ப. 205) “ஒன்று நான் குடும்பம் நடத்தும் ஊரில் பொன்னும் பட்டும் இல்லாதபடி அரசாங்கத்தார் சட்டம் செய்ய வேண்டும். அல்லது, எந்தக் குடும்பத்தாரும் நூறு, நூற்றைம்பதுக்கு மேல் குடும்பத்திற்காகச் செலவு செய்ய முடியாதபடி அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும்." (மலர். ப. 231) "அது என்ன வழக்கம் சாதியில் இல்லாத வழக்கம். குலத்தில் இல்லாத வழக்கம். எட்டு பேர் நலுங்கு வைப் பது பற்றி நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன். வேண்டுமென்றே செய்வதாகத் தெரிகிறதே. முன்னே