பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வாழ்ந்த வீடாக இருந்தால் தெரியும்." (அகல். £-l. "சினிமா நாடகங்களில் அழகும் அலங்காரமும் இருப் பதால் அந்தப் பசி மறைமுகமாகத் தூண்டிவிடப்படு கிறது. சமுதாயத்திலோ பார்த்தும் பேசியும் பழகுவதற்கு வாய்ப்பு இல்லை. இயற்கையாக உணர்ச்சிகளை அடக்கு வதில் சிலர் மட்டும் வெற்றி பெறுகிருர்கள். பலர் கெட்டுப் போகிருர்கள்." (அகல். ப. 40) "சில இளைஞர்கள் காலை மாலை இரண்டு வேளையும் பூசை, கோயில் வழிபாடு எல்லாம் ஓயாமல் செய்து, கட வுளிடம் நிறையப் பயன் எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசி யில் பயன் கிடைக்காமல் ஏமாந்து, திடீரென்று ஒருநாள் நாத்திகர் ஆகிவிடுகிருர்கள்." (அகல், ப. 47) "விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப் பட வேண்டும் தெரியுமா? நீயே அரசர் என்று எண்ணிக் கொண்டு, உன் விருப்பம் போல் ஆட முடியாது. தெரிந்து கொள். (அகல். ப. 416) இவைபோன்று நான் காட்டிய இந்த நாவல்களி லேயே இன்னும் எத்தனையோ கருத்துக்களை இவர் அள் வளித் தெளித்திருக்கிரு.ர். பிற நாவல்களிலும் சிறு கதை களிலும் எண்ணற்றவை உள்ளன. அவை யாவற்றையும் படிப்பவர் நன்கு அறிவர். இங்கே காட்டப்பெற்ற சில கருத்துக்களை இவர் அடிக்கடி தம் நண்பர்களிடமும் மாண வர்களிடமும் சொல்லிக் கொண்டிருப்பார். இத்துணைக் கருத்துக்களையும் இவர் வாழ்விடைச் செயல்படுத்த முனைந் தார் என்ருலும் எல்லாவற்றிலும் இவர் வெற்றி பெற்ருர் என்று சொல்ல முடியாது. சிலவற்றில் இவரும் சூழல்களுக் கும் குடும்ப நிலைக்கும் ஏற்ப விட்டுக் கொடுக்க வேண் டிய இடங்கள் இருந்திருக்கின்றன. ஆயினும் அவற்றை யெல்லாம் தம் மனம் இன்றியே இன்றியே செய்ததாக வும் இசைவு தந்ததாகவும் கூறி வருத்தப்பட்ட