பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 காலங்களும் உண்டு. அதேைலயே மேலே நா ம் கண்டபடி, இவற்றைக் கடமை என்று செய்யவேண் டும் எனவும் அதில் வெற்றி பெறுவது முக்கியமல்ல என வும் இவரே கூறியுள்ளார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சிறப்பாகச் சாதிச் சடங்குகள், அரசாங்க உத் தியோகத் தேர்வுமுறை, மருந்தகத்தின் நிலை, நாட்டுப்புற நகர்ப்புற வேறுபாடு, இரண்டிடங்களிலும் உள்ள நலக் கேடுகள் ஆசியவை பற்றி அடிக்கடி சொல்லிக் கொண் டிருப்பார். ஆம்! அவற்றில் பொதுமைக் கருத்துக்களும் திரு. வி. கவின் உள்ள உணர்வும் நிழலாடும் என்பதை அறிவார் உணர்வர். தமிழ்ச் சமுதாய நிலை பொதுவாகச் சமுதாயத்தின் நலக் கேடுகளையும் அவல நிலையினையும் சீர்திருத்தங்களையும் டாக்டர் மு. வ. அவர் கள் சுட்டிக் காட்டியதோடு தமிழ்ச் சமுதாயத்தின் நிலை, தன்மை, மொழிப்பற்று அற்ற தன்மை, காட்டிக் கொடுக் கும் நிலை முதலியவற்றையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இந்திய நாட்டின் பிற பகுதிகளுக்கெல்லாம் சென்று கண்ட நிலைகளுடன் தமிழக நிலையினை ஒப்பிட்டு அங்கங்கே அவர் சுட்டிய கருத்துக்கள் எண்ணத் தக்கன. வடநாட்டு யாத்திரையிலும் மாநாடுகளில் பங்குகொள்ளச் சென்ற காலங்களிலும் பிற நேரங்களிலும் என் போன்ற உடன் சென்றவரிடம் இவர் அவ்வப்போது வருந்திக் கூறிய எண் ணற்ற கருத்துக்கள் என்முன் நிழலாடுகின்றன. அவ்வாறு நாட்டுப்பற்றின் அவசியம் பற்றியும் நாட்டைக் கண் போன்று காக்க வேண்டும் என்பது பற்றியும் தன் நூல் களில் விளக்கியுள்ளார். எனினும் மேலே கண்ட நூல் களிலும் வேறு பிறவற்றிலும் இவை பற்றி இவர் சுட்டிய ஒரு சிலவற்றைக் காண்போம். "தமிழர்களுக்கு இனப்பற்று இல்லை; மொழிப் பற்றும் இல்லை. அதனால்தான் அவர்கள் இருக்க இருக் கக் கீழே போகிறர்கள்.' (கள்ளோ. ப. 156)