பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தால் மொழித்திறத்தின் முட்டறுப்பா குைம்-மொழித் திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதுநூற் கலைதெரிந்த கட்டறுத்து வீடு பெறும்’ என்பது பழம்பாட்டு. இந்தப் பாட்டுக்கு இலக்கணமாகஎடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் டாக்டர் மு. வ. அவர்கள். அவர் வாழ்ந்த காலம் அளவில் சிறியதே. ஆயினும் அவர் எண்ணிய எண்ணங்கள் அளப்பரியன. உலக ஒருமைப்பாடும் அதில் தமிழ்ச் சமுதாய முன்னேற்றம், தமிழ் மொழியின் செம்மை நலம், மக்கள், நல்வாழ்வு ஆகியன சிறக்கவேண்டும் என்பதும் அவர்தம் எண்ணங் களின் அடிப்படை. அந்த அடித்தளத்தின் மேல்தான் அவர் பலப் பல நூல்களைப் பலப்பல வகையில் எழுதினர். இந்த நூல்கள் அனைத்தும் வையத்தை வாழவைக்கப் பயன்படுவன. - சாதாரண அரசாங்க குமாஸ்தா'வாகவும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியனுகவும் தமிழ்நாட்டு வடகோடியில் தன் வாழ்வினைத் தொடங்கித் தமிழ்நாட்டுத் தென்கோடியில் கல்விநலம் காணும் இம்மதுரையில் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தம் வாழ் ைவ அறுதியிட்டுக் கொண்டவர் டாக்டர் மு. வ. ஆவர். இன்னும் சில காலம் இருந்திருப்பாராயின் இதனினும் உயரிய பதவிகள் இவரை வந்து அடையக் காத்திருந்தன என்பதைச் சிலரே அறிவார். இப்புகழனைத்தும் இவரது சலியா உழைப்பின லும் உயர் எண்ணத்திலுைம் அதன்வழி அமைந்த நற் செயல்களாலும் எழுதிய நல்ல நூல்களாலும் அமைந் தனவேயாம். இத்தகைய நல்லவரைப் போற்றும் முகத்தான் இம் மதுரைப் பல்கலைக் கழகம் அவர் பெயரால் நிலைத்த பணிகள் பல செய்துள்ளது; செய்ய இருக்கின்றது. அவற்றுள் ஒன்றே இந்த நினைவுப் பேச்சின் தொடராகும். இத்தொடரைத் தொடங்கும் வகையில், இந்த ஆண்டில் முதன்முதலாக இத்தொடர் வரிசையில், என்னைப் பேசு மாறு பணித்தம்ைக்கு இப்பல்கலைக் கழகத்துக்கு நன்றி யுடையேன். டாக்டர் மு. வ. அவர்களோடு நெருங்கிப் பழகிய மிகச் சிலருள் நான் ஒருவன். அவரோடு பதினேழு ஆண்டுகள் உடன் பணியாற்றியவன் நான். மேலும் எங்கள் இருவர்தம் குடும்பங்களும் ஒன்றிய குடும்பங் களாகவே வாழ்ந்தன. காண்போர் பலரும் எங்கள் இருவரையும் உடன்பிறந்தவர்களாகவே கருதினர். இந்த