பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நிலையில் நான் அவரைப் பற்றி எண்ணும்போது ஏங்கி ஏங்கி நிற்பதுண்டு. இந்தச் சொற்பொழிவுகளுக்காக இவர் தம் நூல்களைப் படித்த போதெல்லாம் கடந்த நாற்ப தாண்டுகளின் பல நிகழ்ச்சிகள் என் கண் முன் நிழலாடின. சிலவிடங்களில் என்னை மறந்தும் நின்றேன். இந்த ஆய்வுச் சொற்பொழிவுகளில் நான் இவர் நூல் கள் அனைத்தையும் காட்டிவிட்டேன் என்று சொல்ல முடியாது. சிலவற்றைத் தொடவே இல்லை. சிலவற்றின் பெயர்களை மட்டும் குறித்தேன். சிலவற்றின் முன்னுரை களை மட்டும் தொட்டேன். எடுத்துக்கொண்ட ஒருசில நூல்களையும் முற்றும் ஆய்ந்து எழுதிவிட்டேன் என்று சொல்ல இயலாது. நான் காட்டியன மிகமிகச் சிலவே. இவர்தம் ஒவ்வொரு நூலும் தனித்தனியே ஆராயத்தக்க வகையில் அமைந்துள்ளமை அனைவரும் அறிவர். எனவே என் இந்தப் பேச்சுத் தொடர் முற்றிய ஒன்று எனக் கூற இயலாது. முதல் பகுதியில் இவர் படைப்பிலக்கியங்களாகிய நாவல், சிறுகதை போன்றவைகளையும் பிறவற்றையும் எடுத்து ஒரளவு காட்டியுள்ளேன். இரண்டாவது பகுதியில் மொழி, இலக்கியத்திறன் ஆகிய இரண்டின் அடிப்படை யில் அமைந்த நூல்களை எடுத்து ஒரளவு காட்டியுள்ளேன். முன்னதில் இவர்தம் இலக்கியங்களையும்-சிறப்பாகப் படைப்பிலக்கியங்கள் வழி இவர் வாழ்வைத் திறய்ைந்த வகையினையும் ஒல்லும் வகையில் காட்டி, இரண்டாவதில் மொழித் திறன் காட்டிய சிறப்பையும் இலக்கியத் திறன் கண்ட மரபையும் சுட்டிக் காட்டியுள்ளேன். இரண்டிலே யும் நான் அனைத்தையும் முற்றக் காட்டிவிட்டேன் என்று கூற இயலாது. தமிழ்நலம் பேணும் இம் மதுரைப் பல்கலைக் கழகத்து மு. வ. நினைவுச் சொற்பொழிவை முதலாவதாக இந்த ஆண்டில் என்னைப் பேசப் பணித்த தமிழ் உள்ளம் வாய்ந்த துணைவேந்தர் அவர்களுக்கும் பதிவாளர் அவர் களுக்கும் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும் மற்றவர் களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இக் கட்டுரைகளின் குறை நீக்கிக் குணமிருப்பின் ஏற்று நலம் புரக்குமாறு அனைவரையும் வேண்டிக்கொள்ளு கிறேன். பணிவுள்ள அ. மு. பரமசிவானந்தம் பல்கலைநகர், ! தமிழ்க்கலை இல்லம், மதுரை சென்னை-30. 1-2-1978