பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 "தாய்மொழியில் கற்றிருந்தால் இவ்வளவு காலத் தையும் திரும்பத் திரும்ப உதவாப் பாடங்களுக்குச் செலவாக்கியிருக்க வேண்டியதில்லை. கீழ் வகுப்பு களில் தமிழில் படித்திருந்த பாடல்களையே மேல் வகுப்பில் ஆங்கிலத்தில் படித்து அல்லல்பட்டிருக்க வேண்டியதில்லை. கல்வியும் பயன்பட்டிருக்கும். கற்ற முறையும் திருந்தியிருக்கும்.' (கள்ளோ, ப. 38) என் றும் "நாம் இப்பொழுதென்ன நேர் வழியிலா படிக் கிருேம். நமக்கு ஆசிரியர்கள் நேர்வழியிலா கற்றுக் கொடுக்கிருர்கள். ஆங்கில நாட்டுப் பல்கலைக் கழகங் களில் ஆங்கில மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் வாயி லாகவே விஞ்ஞானம் வரலாறு முதலிய பாடங்களைக் கற்பிக்கிருர்கள். அதை அப்படியே இங்கே கண் மூடிப் பின்பற்றுகிறர்கள். நம் மூளைக்கு நேர்வழி தமிழ். அதை விட்டு ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் தானே கற்றுக் கொடுக்கிறர்கள். இப்படிக் கற்பிக்கும் வழி தவருக இருக்கும்போது, நாம் கற்கும் வழித் தவருகத் தான் இருக்கும்" (அகல். ப. 130-31) என்றும் கூறி நாட்டுத் தற்காலத்திய பயிற்று மொழித் திட்டம் எவ்வளவு தவருனது எனச் சுட்டிக்காட்டுகிருர். இப்படியே தம் நூல்களில் பலவிடங்களில் இந்தக் குறை பாட்டினைச் சுட்டிக் காட்டித் திருத்த வழி உண்டா என எண்ணி எண்ணி ஏங்குகிருர் மு. வ. அரசாங்கம் வழி செய்த போதும் மக்கள் மனம் திரும்பவில்லையே என வருந்தும் வழக்கமும் உண்டு. இன்றைய அரசாங்கத்தார் இடைநிலை இரண்டாண்டுகளில் தமிழ் பயில்வாருக்குச் சம்பளச் சலுகை அளித்துள்ளமை ஒருவாறு மு. வ. எண்ணத்தை நிறைவேற்ற வகை செய்யலாம். பாடம் சொல்லிக் கொடுப்பவரும் அவர்களைச் சொல்லிக் கொடுக்க வழி காட்டுபவரும் உளநிறைவோடு செயலாற் றினல் என்ருே தமிழ் நல்ல வகையில் பயிற்றுமொழியாக வந்திருக்கும் என்பது இவர் உள்ளக்கிடக்கை. இன்றும் சில ஆசிரியர்களும் பத்திரிகாசிரியர்களும் வேறு சில