பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தலைவர்களும்தாமே இதைத் தடுக்கவும் நினைக்கின்றனர். 'பூl'யைத் திரு' வாக்கினல் எந்த் மொழியில் இருந்தால் என்ன என்று கடிதம் எழுதுகிற இவர்கள், பார்லி மெண்டை லேக்சபா என அழைப்பதில் மகிழ்ச்சி காணும் நிலையினை எண்ணி எண்ணி மு. வ. நைந்துள்ளார். இவ்வாறு மு. வ. அவர்கள் தாய்மொழியிடத்தும் தாய் நாட்டிடத்தும் கொண்டுள்ள பற்றும் பாசமுமே இவர்தம் இலக்கியங்களில் அவற்றை இடம்பெறச் செய்து, என் றென்றும் வாழும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் பாரதப் பெரு நிலத்துக்கும் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றன. இந்த நூல்களை இவர் எழுதி முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகும் இன்றும் நாட்டு நிலையும் மொழி அமைப்பும் பிறவும் மாருத நிலையினை நாம் எண்ணின் வருந்த வேண்டிய நிலையில் உள்ளோம். வாழும் சமுதாயத்து அடிப்படையான-சமுதாயத்தை வாழ வைப்பதான-இவர் எழுதிய பல நாவல்களையும் சிறு கதைகளையும் பலநாள் எண்ணிஎண்ணியே எழுதியுள்ளார் என்பதை நானறிவேன். நான் முன்னே கூறியபடி இவருக்கு ஒவ்வொரு துறையிலும் வழிகாட்டிகளாகப் பல பெரியோர்களின் எழுத்துக்களைப் பலமுறை பயின்றே அவரவர்தம் அடிச்சுவட்டினை ஒட்டி இத்தகைய இலக்கி யங்களை யாத்துள்ளார். எச். ஜி. வெல்ஸ், பெர்னட்ஷா போன்றவர் நூல்களும் சிலவற்றை இவர் பலமுறை படித் ததை நானறிவேன். அப்படியே காண்டேகர் நாவல்களுள் பலவற்றையும் நாவல் இலக்கியம் பற்றிய மேலைநாட்டு ஆய்வாளர் தம் நூல்களுள் பலவற்றையும் ஒன்றுக்கு மேலாகப் பலமுறை படித்துள்ளார் இவர். இயற்கையுடன் இத்தகைய படைப்பிலக்கியங்களுள் டாக்டர் மு. வ. அவர்கள் மேலே காட்டிய இலக்கிய-சமுதாய உணர்வு களோடு மட்டுமன்றி, இயற்கையோடும் எப்படி உறவாடி