பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கள் செயல்பட, அவர்கள் பெரும்பொருள் கொண்டு தத்தம் பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதைப்பற்றி அடிக் கடி நண்பர்களிடம் சொல்லி, மு. வ. வருந்துவதுண்டு. அதை மொழியியற் கட்டுரை'யில் நன்கு விளக்குகிருர். சங்க காலத்தில் தமிழர் வேங்கடம் கடந்து பொருள் பெருக்கி வந்த நிலைகளையெல்லாம் சுட்டி (அகம் 31, 205, 127, 511) இன்று இப்பொருள் பெருக்கமும் போக்கும் திசைமாறி உள்ளதைக் காட்டுகிறர். 'மகார்' என்ற சொல்லைவிட்டு மக்கள்' என்ற சொல் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் வழங்கிய தன்மையைச் சுட்டிக்காட்டி, அது தவருயினும் பெரும் பாலோர் செய்யும் தவறு வாழ்க்கையில் சடங்காகி விடு வது போன்று இதுவும் நிலைத்த தன்மையினையும் தொல் காப்பியரும் ஏற்றுக்கொண்ட சூழலையும் சுட்டிக் காட்டு கிருர். 'மகார்' என்ற பெயரின் அடிப்படைக்கான மகன், மகள் பற்றிய விளக்கங்களும் பிறவும் இவர்தம் மொழி வளர்க்கும் பான்மையினை நன்கு காட்டுவனவாகும். 'கல்லாத பேர்களே நல்லவர்கள் என்ற தலைப்பில் இவர் தமிழ்ச் சொற்களின் வரலாற்றையும் அவற்ருெடு கலந்து போட்டியிடும் பிறமொழிச் சொற்களின் தன்மை யினையும் தமிழ்ச் சொற்களின் பொருள் குறிக்கும் அடிப் படை நிலையினையும் பிறவற்றையும் தெள்ளத் தெளியக் காட்டும் முறையினைப் படிக்கும்போது, நாம் நம்மை மறந்து தமிழ் மொழிக்கு எவ்வளவு கேடு செய்கிருேம் என்பது நன்கு புலப்படும். சில நல்ல சொற்கள் கல்லாத மக்கள் வாழும் நாட்டுப்புறங்களில் இன்றும் நிலைத்து வாழும் தன்மையை எண்ணியே இக்கட்டுரைக்கு இவர் தலைப்பினை இட்டுள்ளார்."நாட்டுப்புறத்துக் கல்லா மக்கள் பேச்சில் இன்னும் சூரியனும் சந்திரனும் இடம்பெருமல் பொழுதும் நிலாவும் இருத்தலைக் காணலாம்' என்று கட்டு ரையை முடிக்கின்றர். மொழி காப்பதில் மட்டுமன்றித் தமிழ்ச் சமுதாய நெறி, தமிழர் பண்பாடு முதலியவற்றை இன்றும் கெடாமல் காப்பாற்றுபவர்கள் நாட்டுப்புற