பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 மக்களே என்பது இவர் உள்ளக் கிடக்கை: உண்மையும் இதுதானே. ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டல் முறையைக் (spelling) கற்பதற்காக மாணவர் மேற்கொள்ளும் முயற்சி யில் கால் பங்கும் தமிழில் சந்தி ஒலிகளைக் கற்பதற்காக மேற்கொள்வதில்லை. அயலாரிடம் பெருமை பெறுவதற் காக ஆறு மைல் ஒட முனையும் மகன், அன்னையின் அன்புக்காக அரைமைல் நடத்தலும் பெருந்தொல்லை என் கிருன்”, (ப. 140) என்று சந்தி அறியாது தடுமாறியும் கவலையுருத தமிழ் மாணவர் நிலையை எண்ணி நைகிறர் இவர் . "அண்ணன் அழத், தம்பி சிரிப்பான்' என்னும் வாக்கியத்தில் காணப்படுதல்போல், ஒரே இடத்தில் சந்தியிலக்கணம் நிறுத்தற்குறி ஆகிய இரண்டையும் பயன்படுத்துவது பொருந்தவில்லை. பழங்காதத்துக் குடுமியையும் இக்காலத்துக் கிராப்பையும் ஒரே தலை யில் காண்பதுபோல் உள்ளது." (ப. 160) - என்று வேடிக்கையான உவமை காட்டித் தவறுகளைக் களையும் இவர் போக்கு மொழிக்கு அரண் செய்வதாகும். பெரும் இலக்கண ஆசிரியர்கள் தவறு செய்தாலும் கண்டிக்கத் தவருதவர் இவர். பவணந்தி, தொல்காப்பியர், வீரசோழிய ஆசிரியர் போன்ருேரும் தவறு செய்ததைச் சுட்டிக்காட்டி உண்மையை அஞ்சாது இவர் விளக்கியுள் ζΣΥΤΙΤ Τε 'நன்னூலார் இங்குச் செய்த பிழை போலவே, வேறு சில இடங்களிலும் பிழைபடப் பிரித்து விதிகள் எழுதியுள்ளார். வீரசோழியம் என்னும் இலக்கண நூல் நன்னூலுக்குச் சிறிது முற்பட்டது. அந் நூலாசிரி யர் பிழை செய்யினும் நன்னூலார் செய்திருக்க வேண் டுவதில்லை'(ப. 197)என்றும் 'நேர்ந்த இத் தவறுகளைத் தவறுகள் என்று சொல்லாமல், இவற்றிற்குக் காரணம்