பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 திறனையும் அதில் வாழ்வியல் காட்டிய திறனையும் அவற்றின் வழியே உருவாகிய பல்வேறு நாவல், சிறுகதை நாடகம்,கட்டுரை முதலியவற்றின் துணைகொண்டு ஓரளவு கண்டோம். அப்படியே இவருக்கு வழிகாட்டிகளாக நின்ற பெரியவர்களைப் போற்றி எடுத்தாண்ட மரபினையும் கண்டோம். இனி இவர் பண்டைத் தமிழ் இலக்கியத்தின் திறய்ைந்த மரபினை ஒரளவு காட்டி அமையலாம் எனக் கருதுகின்றேன். இலக்கியத் திறய்ைவு முறையினைப் பல ஆண்டுகள் மாணவர்களுக்குப் பலவகையில் இவர் கற்பித்தும் சுட்டிக் காட்டியும் விளக்கியவர். இதற்கென ஆங்கிலத்தில் பல நூல்களைப் பயின்ருர், அவற்றுள் பல பின் இணைப்பில் உள்ளன. இத்துறை தமிழுக்குப் புதியது. எனவே, தமிழில் இத்துறை பற்றிய நூல்கள் இல்லாத குறையைப் போக்கி யவர் இவர் எனல் பொருந்தும். மொழி வரலாற்றுத் துறையில் இவர் முன் நின்றமை போன்றே இலக்கியத் திறய்ைவுத் துறையிலும் தமிழில் இவர் முன்னேடியாவார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பட்டங்களாகிய பீ.ஓ.எல்., பீ.ஓ.எல்- (ஆனர்சு) எம்.ஏ. முதலிய பட்டங் களைப் பெறப் பாடத்திட்டங்களை அமைத்தபோதும் அவற்றை அவ்வப்போது செப்பம் செய்த போதும் இத் திறய்ைவுக்குரிய பாடத்திட்டங்களையும் நூல்களையும் வகுத்து வரையறை செய்தவர் இவரேயாவர். இத்தகைய திறய்ைவு முறைபற்றி ஆங்கிலத்தில் எத்தனையோ நூல்கள் வந்துள்ளன; வந்துகொண்டே யிருக்கின்றன. தமிழிலும் தற்போது சில நூல்கள் வருகின்றன. எனினும் போதிய அளவு இத்துறையில் தமிழ்ப் பேரறிஞர் கருத்திருக்கவில்லை என்பது தெளிவு. டாக்டர் மு.வ. அவர்கள் இத்திறய்ைவு முறைபற்றி "இலக்கியத் திறன்', 'இலக்கிய மரபு', 'இலக்கிய ஆராய்ச்சி' போன்ற நூல்கள் எழுதியதோடு அமையாது, ஒரளவு தமிழில் உள்ள பழங்காலத்தில் எல்லா இலக்கியங்களையும்