பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தாமே திறய்ைந்து நூல்களை எழுதியுள்ளமை நாடு அறியும். புத்திலக்கியப் படைப்பில் நாவல் முதலியவற்றை எழுதிப் புகழும் பொருளும் பெறுவார் - பெற்றவர் ஒரு சிலர் இருப்பினும், அவர்கள் இத்தகைய மொழி ஆய்வு, திறய்ைவு முதலியன செய்யவில்லை என்பதையும் நாடறியும். ஆனல் டாக்டர் மு.வ. அவர்கள் தொடாத துறையில்லை என்னுமாறு எல்லாத் துறைகளுக்கும் நூல் கள் எழுதியமை போன்று இவற்றையும் ஆய்ந்து அலசி நூல்கள் வெளியிட்டமை உயர்ந்த நிலையாகும். அதிலும் திறனுய்வுத் துறையின் இலக்கணத்தைச் சுட்டிக் காட்டிய தோடு, தாமே இலக்கியங்களையும் திறய்ைந்த திறன்செம்மையாகத் திறய்ைந்த திறன் - போற்றக் கூடிய ஒன்ருகும். இலக்கியங்களைத் திறய்ைந்த மரபினை நாம் இங்கே மூன்று வகையாகக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். ஒன்று முழு நூல்களாக இவர் ஆராய்ந்து வெளியிட்டவைதிருக்குறள், சிலம்பு போன்றவற்றின் திறய்ைவு. மற் ருென்று ஒரு பாட்டுக்கு ஒரு பேராய்வு செய்து வெளியிட் டவை-ஒவச் செய்தி, கொங்குதேர் வாழ்க்கை போன் றவை. மூன்ருவது தொகை நூல்களைத் தனித்தனியாக எடுத்துத் திறன் கண்டநிலை. நேற்று இந்தப் பாடல்களுள் பலவற்றை இவர் படைப்பிலக்கியங்களில் எடுத்துக் கையாண்ட தன்மைகளையும் முறைகளையும் கண்டோம். எதை எழுதினுலும் இவர் நூல்களில் திருக்குறள், சங்க இலக்கிய வாடை வீசுவதைப் பயில்வோர் நன்கு அறிவர். இந்த மூவகைப்பட்ட நிலையினையும் ஒன்றன்பின் ஒன்ருக எடுத்து ஆய்வதென்பது நம் கால எல்லையில் இயலாத ஒன்று. எனவே, ஒவ்வொரு வகைக்கும் ஒன்று அல்லது இரண்டு எடுத்துக் காட்டி அமையலாம் என எண்ணு கிறேன். 'கொள்வோர் கொள்வகை அறிந்து அவர் உளங் கொளச் சொல்வதில் வல்லவர் மு. வ. என்பதை நரடறி யும். எனவே இவர்தம் திறய்ைவு நூல்களிலும் இந்தத்