பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 யும் உலகம் உள்ளளவும் வாழவைத்து வையத்தை வள முள்ளதாக்கும் இந்த இலக்கியங்களை நாம் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிருேம். வாழ்வைப் பிணைத்து உள்ளத்து உதித்தெழுந்த இலக் கியங்கள் காலத்தை வென்று வாழ்வனவாகும். இஃது எம்மொழிக்கும் பொருந்திய ஒரு மேல்வரிச் சட்டம். ஒவ் வொரு மொழியிலும் பல்லாயிரக்கணக்கான இலக்கி யங்கள் தோன்றினும் அவை காலத்தை வென்று வாழ்வ தில்லை. எங்கோ சில நிலைத்த வாழ்வைப் பெறுகின்றன. காரணம் ஒன்றேதான். ஆம்! மக்கள் வாழ்வினை - சமு தாய வாழ்வினை - உயிர் வாழ்வினைப் பின்னிப் பிணைந்து எழும் இலக்கியங்கள் அனைத்தும் - எம்மொழியில் தோன் றினும்-அவை காலத்தை வென்று வாழும். அல்லாதன...! டாக்டர் மு.வ. தமிழ்மொழியில் இத்தகைய வாழ்விலக்கியங்கள் எண்ணற்று உள்ளன. அவற்றை ஓரளவு எல்லையிட்டுக் காட்டினும், அதன் அளவு, பிறமொழி இலக்கியங்களை நோக்க - எங்கோ ஓரிரு மொழிகள் தவிர்த்து - மிகப்பரந்து காணப்படுகின்றதென்பது உலகறிந்த உண்மை. மேலும் காலத்தால் பழமை பெற்ற இலக்கியங்களும் தமிழில் பல உள்ளன. இவற்றுள் சிலவற்றை ஆக்கிய பெரியோர் தம் பெயர்கள் கூடத் தெரியவில்லை யாயினும் அவை தம் பொருட் செறிவாலும் நலத்தாலும் காலத்தை வென்று வாழக் காண்கின்ருேம். இத்தகைய நல்ல இலக்கியங்களை நாட்டில் அன்றுதொட்டுப் பயில்வார் பலர்; பலன் காண் பார் சிலர். ஆயினும் தம்மை அதனுள் ஆழ்த்தி, அந்த இலக்கியக் கடலுள் மூழ்கி, முத்தெடுத்து உலகுக்கு அளிப் பார் மிகச் சிலரே. அச்சிலருள் இந்த நூற்றண்டில் நம் மிடை வாழ்ந்து மறைந்த நல்லவரும் சிலர் உள்ளனர். அவருள் மிகச் சிறந்தவராகப் போற்றத்தக்கவர் டாக்டர் மு. வரதராசன் அவர்கள் ஆவர்.