பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வு இவர்தம் இலக்கிய உளத்தையும் ஆழத்தையும் அறிவையும் ஆர்வத்தையும் ஆயும் திறனையும் எண்ணிப் பார்ப்பதற்கு முன் இவர் வாழ்வு பற்றி எண்ணல் சால் புடைத்தாகும் என எண்ணுகின்றேன். வடார்க்காடு மாவட்டத்தில் வேலம் என்னும் சிற்றுாரில் எளிய குடும் பத்தில் தோன்றிய இவர் மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக மறைந்த வரையில் - அறுபத்து இரண்டு ஆண்டுகள் வாழ்வில் ஆற்றிய செயல்களை ஈண்டு நாம் முறைப்படுத்திக் காண வேண்டுவதில்லை. அவர்தம் வாழ்க்கைச் சூழல், பிறந்த ஊர், வட்டம், மக்கள் வாழ்வு, பழக்க வழக்கங்கள், சமுதாயச் சார்பு, நாட்டுப்புற நகர்ப் புற வாழ்வுநிலை ஆகியவை இவர்தம் நூல்களில் இடம் பெற்றமையைக் காணின் இவர் வாழ்வே நன்கு புலகுைம். இவர்தம் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலியவை களில் அவை அனைத்தும் நன்கு காட்டப்பெற்று விளக்கம் பெறுவதோடு, விமரிசனமும் செய்யப் பெறுகின்றன. 'மு.வ.'வின் சொந்த ஊர் வடார்க்காடு மாவட்டத்து வேலம் என்ருலும், இவர் பிறந்த ஊர் அம் மாவட்டத் தைச் சார்ந்த திருப்பத்துரேயாகும். இவரது இயற்பெயர் 'திருவேங்கடம்' என்ருலும் பாட்டன் பெயராகிய வரத ராசன்' என்ற பெயராலேயே வழங்கப் பெற்ருர். தாயா கிய அம்மாக்கண்ணு அம்மாவிடமும் தந்தையாகிய முனுசாமி முதலியார் அவர்களிடமும் இவர் கொண்ட பற்றினைக் காட்டிலும் இவரது தாய்வழிப் பாட்டியாகிய நரசம்மா அவர்களிடமே இவர் அதிகப் பாசமும் பற்றும் கொண்டு வளர்ந்தார் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. இளமையில் அந்தப் பாட்டியின் பரிவும் பண்புமே இவ ரைப் போற்றி வளர்த்தன; இவரை நல்லவராகவும் வல்ல வராகவும் ஆக்கிய பெருமையும் அவருக்கே உண்டு அது மட்டுமன்றி, எங்கோ கிராமத்தில் தோன்றி - வளர்ந்த அந்த வயதான பாட்டியே டாக்டர் மு.வ.'வின் சீர்திருத்த