பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 நிறைந்த கட்டுரைகளாய் அமைந்த ஒன்று என்பது தேற்றம். இலக்கியத் திறன், இலக்கிய மரபு என்ற இருநூல்கள் இலக்கியத்தின் பலவகைத் தன்மைகளையும் வேறுபாடு களையும் பிறவற்றையும் விளக்குவனவாகும். இரண்டும் பெரும்பாலும் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு இவர் பாடம் சொல்லிக் கொடுத்த அடிப்படையிலும் பல்கலைக் கழகச் சொற்பொழிவுகளாகவும், அமைந்தனவாகும். இலக்கியத் திறய்ைவு பற்றி மேலைநாட்டு அறிஞர்கள்சிறப்பாக ஆபர்குரோம்பி, ஹட்சன், வின்செஸ்டர், ரிச்சர்ட்ஸ் போன்ருர் எழுதியுள்ள நூல்களின் அடிப்படை யில் இவர்கள் அந்த நாட்களில் பாடம் நடத்துவது வழக்கம். அந்த நூல்களை ஒட்டியும் அவற்றெடு சார்பான பிற நூல்களை ஒட்டியும் இவர்தம் இரு நூல்களும் அமைந் துள்ளன எனலாம். இலக்கியத்திறன் என்னும் நூலுள் அறிவியல், கலை என்ற இருவகைப் பகுப்பினையும் ஆராய்ந்து அவற்றின் வேறுபாடுகளை உணர்த்தி, கலையின் கூருண இலக்கியத் திறனைக் காட்டி,அதற்கு இன்றியமையாத தன்மைகளையும் பிறவற்றையும் விளக்குகிறர். மேலும் கலைகளின் பல்வேறு பிரிவுகளையும் அவற்றின் சிறப்பியல்புகளையும் அவை மக்கள் உள்ளங்களை ஈர்க்கும் நிலையில் பெற்றுள்ள அழகின் தோற்றத்தையும் அக்கலைகள் எதற்காக என்ப தையும் விளக்குவதோடு, அடுத்து அத்தகைய நல்ல கலைகளைப் படைப்பவர் யாவர் என்பதையும் தெளிவு படுத்துகிரு:ர். 'கண்ணுல் கண்ட பொருள்கள் அழகைப் பிறரும் காணுமாறு கற்பனையில் படைத்துக் காட்டல், செவி யால் கேட்டுப் பெற்ற ஒலி இன்பத்தைப் பிறரும் கேட்டு மகிழுமாறு கற்பனையில் படைத்து அளித்தல் முதலியவைகளே கலைஞர் தொழில்" (இலக்கியத் திறன் 37-38.) 6 A. \