பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. "இரக்கம் மிகுந்தவர்களின் உள்ளமே எல்லா உணர்ச்சிகளும் கலைப்படைப்புக்கு ஏற்றவாறு அமைந்து விளங்கும் உள்ளமாகும்" (ப. 39) என்றும் இன்னும் பலவகையிலும் மேலைநாட்டு அறிஞர் கள் கலையினைப் போற்றும் பண்பினை இவர் சுட்டிக் காட்டு கிருர். பின் இலக்கியம் என்பது என்ன என்பதையும் அந்த இலக்கியமும் கலையும் தோன்றுவதற்குக் காரண மானவை யாவை என்பதையும் விளக்கி, இலக்கியத்தில் உள்ள செய்யுள் உரைநடை இவைகளின் கூறுபாடுகளை யும் பிறவற்றையும் அந்த மேலைநாட்டு அறிஞர்தம் வாய். மொழி கொண்டே விளக்குகிருர். இத்துறையில் தமிழில் இதுவரையில் திறய்ைவு நூல்கள் இல்லாத காரணத்தாலும் மேலைநாட்டு அறிஞர் இத்துறையில் பல வகையில் ஆராய்ச்சி செய்து முன்னேறியுள்ளமையிலுைம் இத்திற ய்ைவு பற்றிய விளக்கங்களை அவர்கள் அடி ஒற்றியே விளக்கிச் செல்லுகிறர். பாட்டின் தோற்றம், தொன்மை, வளர்ந்த நிலைகள் பிறவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி அவை எவற்றின் நிலைக்களகை - எந்தப் பொருள் களின் அடிப்படையாக - எந்தெந்த உணர்வின் திறப்படி தோன்றுகின்றன என்பதையும் விளக்குகிரு.ர். அடுத்து, அப்பாட்டு தோன்றுதற்குக் காரணமாய உணர்ச்சி, கற்பனை ஆகியவைகளை விளக்கி அவை பெற்ற வடிவத்தினையும் தெளியக் காட்டுகின் ருர். இவை அனைத் துக்கும் துணையாக நின்றவர்கள் வின்செஸ்டர் (C.T. Winchester) போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் என்பதை யும் இவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. உணர்ச்சியைப் பற்றி இவர், "இலக்கியத்தின் உணர்ச்சி மூவரிடம் உள்ளது. மூவருடைய உணர்ச்சியும் ஒன்றுபடும்போது ஒர் இன்பம் உளதாகிறது. இலக்கியம் இயற்றிய புலவரின் உணர்ச்சி; அதில் வரும் கற்பனை மாந்தரின் உணர்ச்சி; அதைக் கற்பவர் பெறும் உணர்ச்சி ஆகிய மூன்றும்