பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 தமிழில் அன்றுதொட்டு வளர்ந்துள்ள இலக்கியங்களை ஒன்றன்பின் ஒன்ருக வரிசை இட்டுக் காட்டுகிறர். சங்க காலத்துக்கு முற்பட்ட இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை யி ல் (என்னுடையவற்றையும் சேர்த்து) தமிழ் இலக்கிய வரலாறு வளர்ந்த வன்கயினைத் தெள்ளத் தெளியக் காட்டுகிறர். பழங்காலம் (கி. மு. 500 முதல் கி. பி. 600 வரை) எனவும், இடைக்காலம் (கி.பி. 600 முதல் 1800 வரை) எனவும், பிற்காலம் (கி. பி. 1800க்குப் பின்) எனவும் காலத்தை மூன்று கூறுகளாக்கி அவ்வக் காலங்களின் இலக்கியங்களையும் மேலும் காலத்தை ஒட்டி ஒன்பதாகப் பாகுபடுத்தி (3-4+2) அவ்வக் காலத்துச் சூழல் முதலியவற்றையும் சமுதாய வாழ்வினை ஒட்டியும் அவை வளர்ந்த வகையில் சுட்டிக் காட்டுவது ஒரு தெளிந்த ஒளிக் காட்சியாகும். இது வரலாறக உள்ளமை யின்-அதிலும் அரசாங்கச் சார்பு பெற்ற சாகித்திய அகாதமியின் வாயிலாக வந்த நூலானமையின்-தம் சொந்தக் கருத்துக்களையோ கொள்கைகளையோ அன்றித் தம்மால் போற்றப்படுவர்தம் சொற்பொருள் விளக்கங் களையோ பிற கருத்துக்களையோ விளக்காது நேரிய வழி யில் எடுத்துக்கொண்ட பொருளை மட்டும் விளக்கிச் செல்லுகின் ருர் என்பதை நோக்க வேண்டும். இவர்தம் முன்னுரையோ வேறு கருத்து விளக்கங்களோகூட இல்லை என்பதும் கண்கூடு.இந்தத்துறையில் இதற்கு முன்பே சில நூல்கள் வந்துள்ளன என்ருலும் அனைத்தையும் தொகுத்து அன்றுதொட்டு இன்று வரை வரையறுத்த எல்லையில் நின்று இத்தகைய முறைப்படுத்திய வரலாறு இதற்குமுன் வரவில்லை எனலாம். இந்நூல் பற்றிய பதிப்பாளர் குறிப்பில் கூறியபடி பொதுவாக தமிழிலக்கிய வளர்ச்சி பற்றி அறியவிரும்பு வோருக்கு இந்நூல் பயன்படுவதாகும் என்பதை உணர்தல் வேண்டும். இத்தனைப் பக்கங்கள் அமைய வேண்டும் என்ற வரையறை காரணமாக, எல்லா நூல் களுக்கும் நூலாசிரியர்களுக்கும் போதுமான விளக்கங்கள்