பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தர இயலாவிட்டாலும், இலக்கிய வளர்ச்சியில் காணப் படும் மாறுதல்களும் புதுப் போக்குகளும் சிறப்பியல்பு களும் ஆங்காங்கே தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள் ளன," என்ற பதிப்பாளர் தம் குறிப்பும் எண்ணத்தக்க தாக உள்ளது. இந்த மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த காலத்தில் இவர் எழுதிய பெருநூல்வெளியிடப் பெற்ற பெருநூல் இது என்பதால் இத்தகைய உயர்பெருமை இப்பல்கலைக் கழகத்தைச் சாரும் என்பது தெளிவு. வள்ளுவார் உள்ளம் இனி இவர் திறய்ைந்த நூல்களைப் பற்றி எண்ணு வோம். தனி நூலாகிய பெரு நூலாம் திருக்குறளை எடுத் தாய்ந்து திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ எனப் பெயரிட்டு வெளியிட்ட நூல் மிக உயர்ந்த ஒன்ருகப் போற்றப் பெறுகின்றது. இதன் சிறப்பினை நான் கூறுவதை விட திரு. வி. க. அவர்கள் எழுத்தின் வழியே காணுதல் பொருத்தமானதாகும். இந்நூலுக்கு முன்னுரை எழுதிய திரு. வி. க. அவர்கள் கூறிய கருத்துக்களுள் சிற வற்றைக் கீழே தருகிறேன்: 'உலகம் ஒரு குலம் என்பது பழந்தமிழர் பண் பாட்டினின்றும் முகிழ்த்த ஒரு பெருங் குறிக்கோள். அக்குறிக்கோள் திருவள்ளுவருள் படிந்து நின்று வளர்ந்து ஒரு சீரிய உலக நூலாயிற்று.” 'திருக்குறள் ஒரு சுரங்கம். அஃது அவ்வக்கால உலகைப் புரக்கும் பொருள்களை அவ்வப்போது வழங்கும் பெற்றியது. அதினின்றும் இதுகாறும் அறிஞர் களால் எடுக்கப்பட்ட பொருள் சிலவே; மிகச்சிலவே. இவ்வேளையில் திரண்டுவரும் புது உலகமும், இனித் திரளப்போகும் பலவகை உலகங்களும் ஏற்கத்தக்க பொருள்கள் இன்னும் திருக்குறளில் மிடைந்து கிடக் கின்றன. திருக்குறட் சுரங்கம் வற்ருதது.