பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 'திருக்குறளைப் பற்றிய ஆராய்ச்சிகள் புதுமைப் போர்வையில் இனி வெளிவருவது நல்லது, இப்பொழுது ஒன்று வெளிவந்துள்ளது. அது 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்' என்னும் இந்நூல். இதிலே புது உலக மணம் கமழ்கின்றது. “இத்தகைய நூலை யாத்தவர் டாக்டர் மு. வரதராசனர், எம். ஒ. எல். ஆசிரியர் வரதராசனுரை யான் நீண்ட காலமாக அறிவேன். ஆசிரியர் வரதரா சனர் பெருங்கலைஞராய் நாட்டை நல்வழியில் ஒம்பும் தொண்டராவர் என்று யான் நினைத்த துண்டு. அந்: நினைவு பழுதுபடவில்லை. அவர் இயற்றியுள்ள நூல்கள் நாட்டை நல்ல வழியில் ஒம்பிவருதல் கண்கூடு.” 'தோழர் வரதராசனர் ஒரு கலைக் கழகம்; பொறு மைக்கு உறையுள்; அமைதிக்கு நிலைக்களன், புரட்சி அவர் நெஞ்சில் பொங்குகிறது; வாயில் வழிகிறது; கையில் நிகழ்கிறது. தோழர் புரட்சியை இந்நூலில் பரக்கக் காணலாம்.' 'திருக்குறள் பால்வைப்பைப் பார்ப்போம். அஃது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று வைப்பைப் பெற்றிருக்கிறது. "இவ்வமைப்பைத் தலை கீழாக்குகிருர் வரதராச னர். புது உலக மக்களுக்குத் திருக்குறள் ஆராய்ச் சித் துறைகளை எளிமையாக்குதல் வேண்டுமென்பது அவர் கருத்துப் போலும், நூலின் தோற்றுவாயிலேயே புரட்சி வீசுகிறது புரட்சி, நூல் நெடுகப் புகுந் துள்ளது.' "இந் நூலிடை ஆசிரியர் புரட்சி செய்துள்ளார். அப் புரட்சியின் அடியில் அறம் செறிகிறது. மூர்க்கம்