பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 / வயலூர் சண்முகம்




நாட்கள் தோறும் பிற்பகல் வேளையில்
ஆட்கள் யாரையும் தேடா மலேயே
வீட்டுப் பின்புறம் வேலி அமைத்தத்
தோட்டம் தன்னில் தணிகாசலம் உழைத்தார்!

கீரை வகைகளும் கிழங்கு வகைகளும்
சாரையாய் நாற்புறம் தென்னை மரங்களும்
தாருடன் நிற்கும் வாழை மரங்களும்
ஊரே வியக்க தணிகாசலம் வளர்த்தார்!

அவரை; வெண்டி, பீர்க்கன்; பாகல்
துவரை; முருங்கை; தக்காளி மிளகாயுடன்
தவழும் பச்சைக் கொடிக ளோடே
நவநவ மான பூச்செடிகளும் உண்டு!

பக்கத் திலேயே பசுக்கள்; கோழிகள்
எக்க ளிப்புடனே இரையுண்டு வளர்ந்தன!
மிக்க உழைப்பால் மிகுந்தன! பெருகின!
தக்கவர் பேணினால் தழைக்காததும் உண்டா?