பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரே ஒரு வரம்!

கந்தன் என்பவன் ஓர் ஏழை!
கண்கள் இரண்டும் பார்வை இலான்!
சுந்தரி என்பவள் அவன் மனைவி!
தூய குணங்கள் மிகவுடையாள்!

குருடனாய்க் கணவன் ஆனதிலும்;
குடும்பம் வறுமை கொண்டதிலும்
பெரிதும் துயருறும் சுந்தரிக்குப்
பிள்ளைப் பேறும் வாய்க்கவில்லை!

கந்தன் - சுந்தரி தம்பதிகள்
கஷ்டம், துன்பம் பட்டாலும்
எந்த நேரமும் கடவுளையே
எண்ணித் தொழுதே வந்தார்கள்!