பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘டானா' முத்து / 59



“தண்டச் சோறு! தடிமாடு!
சட்டிச் சோறு! மடக்கழுதை!!"
கொண்டைக் கம்பால் அடித்தபடி
கோதை இப்படித் திட்டிடுவாள்!

பாவம்! தங்க ராசுவுமே
பார்க்காது போலவே நழுவிடுவார்!
கோவப் பட்டால் அவரையுமே
கோதைத் திட்டி ஏசிடுவாள்!

போதாக் குறைக்கு வேலுவுக்கு
பொழுது சமயம் இல்லாமல்
ஏதோ வலிப்பு நோய தனால்
இம்சை வந்து வீழ்ந்திடுவான்!

'காக்கா வலிப்பு' நோயென்றார்!
கரும வியாதி என்றார்கள்!!
சாக்கிர தையாய் இருந்திட்டான்!
தண்ணீரைக் கண்டால் பயந்திட்டான்!"