பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றமும் தண்டனையும்

147



“எல்லாம் இந்தக் கயவனின் செயலால்தான்” என்று நினைத்தான் அக்ஸனோவ். மகார்செமினிச் மீது மாபெரும் ஆத்திரம் உண்டாயிற்று அவனுக்கு, அவன் பேரில் வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டும்; அம் முயற்சியில் தானே அழிந்து பட்டாலும் சரிதான் என்ற அவா எழுந்தது. ராத்திரி பூராவும் அவன் பிரார்த்தனை பண்ணியும் பயன் இல்லை. மனம் அமைதி காண முடியாமல் தவித்தது. பகல் வேளையில் அவன் மகார் செமினிச்சின் அருகில் செல்லவே இல்லை; அவன் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.

இந்த விதமாக இரண்டு வாரங்கள் கழிந்தன. இரவு நேரங்களில் அவன் தூங்குவதே இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் குழம்பித் திண்டாடினான் அவன்.

ஓர் இரவில் அவன் சிறையினுள் சுற்றி வந்து கொண்டிருந்தான். ஓர் இடத்தில், கைதிகள் படுத்து உறங்குவதற்குரிய பகுதியின் ஒரு பக்கத்திலிருந்து, மண் உருண்டுபுரண்டு வெளியேவருவதை அவன் கவனித்தான். அது என்ன என்று ஆராய்வதற்காக அவன் அங்கேயே நின்றான். திடீரென்று உள்ளேயிருந்து மகார் செமினிச் வெளியே ஊர்ந்து வந்தான். அக்ஸனோவைக் கண்டதும் பயத்தினால் அவன் முகம் வெளிறியது. அக்ஸனோவ் அவனைப் பாராததுபோல் அப்பால் செல்ல முயன்றான். ஆனால் மகார் அவன் கையைப் பற்றி நிறுத்தினான். தான் சுவருக்கு அடியில் ஒரு துவாரம் தோண்டி விட்டதாகவும், தோண்டி எடுத்த மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக பூட்ஸில் வைத்து ஒவ்வொருநாளும் வெளியே எடுத்துச் சென்று, கைதிகள் வேலைக்குப் போகிற வழியில்