பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

டால்ஸ்டாய் கதைகள்

உறுத்தல் ஏற்படுத்தின என்பது நன்றாகப் புரிந்தது. அவன் கடுமையாக முகத்தைச் சுளித்துவிட்டுக் காரித் துப்பினான்.

‘நீங்கள் பணம் கொண்டு போகிறீர்கள். காற்று நிலைமை இன்னும் மோசமாகப் போனால் என்ன செய்வீர்கள்? நல்லதுக்குத்தான் சொல்கிறேன். அவனையும் கூட்டிக்கொண்டு போங்கள்’ என்று அவள் அதே சோகக் குரலில் தொடர்ந்து பேசினாள்.

‘ஏன்? அந்த வழி எனக்குத் தெரியாதா? என் கூடத் துணைக்கு ஒரு ஆள் வேண்டுமா என்ன?’ என்றான் வாஸிலி. அவன் ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக உச்சரித்தான். சாமான் வாங்க வந்தவர்களிடமும் விற்கிறவர்களிடமும் பேசுகிற தோரணையோடு, தனது உதடுகளை இயல்புக்கு மாறான முறையில் அழுத்திக் கடித்துக்கொண்டே பேசினான் அவன்.

போர்வையை இழுத்து மேலும், நன்றாக மூடி முக்காடிட்டுக் கொண்டே அவள் சொன்னாள்: ‘நீங்கள் அவனையும் அழைத்துச் செல்வதுதான் நியாயமாகும். ஆண்டவன் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.’

‘பாரேன். அட்டை மாதிரி அதிலேயே ஒட்டிக் கொண்டு விடமாட்டேன் என்கிறாளே......... அவனை நான் எங்கே கூட்டிப் போவது?’ என்று அவன் முணமுணத்தான்.

‘வாஸிலி ஆன்ட்ரீவிச், நான் உங்கள் கூட வரத் தயார்’ என்று குதூகலத்தோடு சொன்னான் நிகிட்டா. பிறகு எஜமான் மனைவியின் பக்கம் திரும்பி, ‘ஆனால்