பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டால்ஸ்டாய் கதைகள்

சட்டைப் பைகளுக்குள்ளே இருந்த கைகளை வெளியே இழுத்தான். குளிரினால் சிவப்பேறிவிட்ட கரங்களினால் அவன் குதிரை லகானை பற்றிக்கொண்டான். அந்தத் தோல் வாரும் குளிர்ந்துதான் இருந்தது.

நிகிட்டாவை நோக்கிச் சிரித்துக்கொண்டே வாஸிலி ஆன்ட்ரீவிச் சொன்னான், ‘உன்னை அலங்காரம் பண்ணிக் கொள்வதிலேயே அநாவசியமாகக் காலம் போக்கிவிடாதே. சுறுசுறுப்பாக வந்து சேரு!’ என்று.

ஒரு நொடியிலே வந்து விடுகிறேன் ஐயா என்று சொன்ன நிகிட்டா, தோலினால் ஒட்டுப் போடப் பெற்று கனமாகியிருந்த பூட்ஸை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடினான். முற்றத்தின் குறுக்காக ஓடி, தொழிலாளர்கள் தங்கும் குடிலுக்குள் புகுந்தான்.

‘அரினுஷ்கா! அடுப்புப் பரணுக்கு மேலே இருக்கிற என் கோட்டை எடுத்துக் கீழே போடு. நான் எஜமானோடு பிரயாணம் போகிறேன்’ என்று அவன் சொன்னான். அங்கே ஆணியில் தொங்கிய இடுப்புப் பட்டையை வேகமாக எடுத்துக் கொண்டான்.

தொழிலாளிகளுக்கு உணவு ஆக்கிப் போடுகிற சமையல்காரி, உண்ட களைப்பினால் நன்றாக உறங்கிய பிறகு விழித்து எழுந்து, தனது கணவனுக்கு வெந்நீர் தயாரிப்பதற்காக [1]‘ஸமோவா’ரைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே புகுந்த நிகிட்டாவை உற்சாகத்தோடு கவனித்தாள் அவள். அவனது


  1. ‘ஸமோவார்’ என்பது ‘பாய்லர்’ மாதிரி, வெந்நீர் தயாரிக்க உதவும் பாத்திரம். அதில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வெகு நேரம் வரை சூடு ஆறாமல் பாதுகாக்க முடியும்.