பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

டால்ஸ்டாய் கதைகள்

அவன் ‘எல்லாம் திருப்தியாக முடிந்தது’ என்று சொன்னான்.

‘உன் கால்களுக்குப் பாதுகாப்பாக ஏதாவது சுற்றிக்கொள்ள வேண்டும், நிகிட்டா. உன் பூட்ஸ் மகா மோசமாக இருக்கிறதே’ என்றாள் அவள்.

திடீரென்று அவ் உண்மையை உணர்ந்தவன் போல அவன் நின்றான். ‘ஆமாம் அப்படிச் செய்ய வேண்டியதுதான்.... ஆனால் இந்தத் தடவை இவையே போதும். இப்ப ரொம்ப தூரம் போகவில்லையே!’ என்று கூறிவிட்டு, அவன் முற்றத்திற்கு ஓடினான்.

அவன் சறுக்கு வண்டியை அணுகியதும், ‘உனக்குக் குளிரவில்லையா நிகிட்டா?’ என்று எஜமானின் மனைவி கேட்டாள்.

‘குளிரா? அதொன்றும் இல்லையே.. கதகத வென்றுதான் இருக்கிறேன்’ என்று அவன் சொல்லி விட்டான். தனது பாதங்களை மூடி மறைப்பதற்குத் தகுந்தபடி, கொஞ்சம் வைக்கோலை வண்டியின் முன் பக்கத்திற்குத் தள்ளிக் கொண்டான். அந்த நல்ல குதிரைக்குத் தேவைப்படாது என்கிற காரணத்தினால் அவன் சவுக்கை எடுத்து அடியில் போட்டு வைத்தான்.

மென்ரோமம் அடர்ந்த மேல் சட்டைகள் இரண்டை ஒன்றுக்குமேல் ஒன்றாக அணிந்திருந்த வாஸிலி ஆன்ட்ரீவிச் இதற்குள்ளாக வண்டியில் ஏறி உட்கார்ந்து விட்டான். அவனது அகன்ற முதுகு வண்டி பூராவையும் அடைத்துக் கொள்வதுபோல் விரிந்து பரவியிருந்தது. அவன் வார்களைக் கைப்பற்றிக் கொண்டதுமே குதிரையைத் தட்டினான். வண்டி நகரத்தொடங்கியபோதுதான் நிகிட்டா தாவி