பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

டால்ஸ்டாய் கதைகள்

அவர்கள் உணர்ந்தார்கள். ரஸ்தாவைக் கண்டுபிடிப்பதே சிரமமாகத் தோன்றியது. வண்டிச் சறுக்கிகள் விடுத்துச் சென்ற தடங்கள் உடனடியாகவே பனியினால் மூடப்பட்டன. தரையின் இதர பகுதிகளை விடக் கொஞ்சம் உயரமாக இருந்தது என்பதைக் கொண்டுதான் ரஸ்தாவை நிர்ணயிக்க முடிந்தது. வயல்களின் மீது பனிச் சூறை சுழன்றடித்தது. விண்ணும் மண்ணும் ஒன்று கூடுகிற இடம் கண்களுக்குப் புலனாகவே இல்லை. சாதாரணமாய் பளிச்சென்று தெரியக்கூடிய டெல்யாட்டின் காடு இப்பொழுது சமயா சமயங்களில் தெளிவற்றுத் தோன்றியது. ஓடிவரும் பனிப் புழுதியினூடு மங்கலாகத் தென்பட்டது அது.

காற்று இடது பக்கத்திலிருந்து அடித்தது. குதிரையின் மழமழப்பான கழுத்தின் மீதுள்ள பிடரி மயிரை ஒரே பக்கத்தில் ஓயாது தள்ளிக் கொண்டிருந்தது. அதன் மயிரடர்ந்த வால் வெறும் முடிச்சுப் போட்டுக் கட்டிவிடப் பெற்றிருந்தது. அதைக்கூட காற்று ஒரு புறமாகவே ஒதுக்கி விளையாடியது. காற்றோட்டத்தில் உட்கார்ந்திருந்த நிகிட்டாவின் மேலங்கியின் கழுத்துப்பட்டை அவனது கன்னத்தோடும் மூக்கோடும் சேர்ந்து ஒட்டிக் கொண்டது.

‘இந்த ரோடு குதிரைக்கு வசதிப்படவில்லை. ஒரே பனி மயமாக இருக்கிறது. முந்தி ஒருதடவை நான் இதே குதிரையை வைத்துக் கொண்டு பாஷுடினோவுக்கு அரைமணி நேரத்தில் போயிருக்கிறேன்’ என்று சொன்னான் வாஸிலி. தனது அருமையான குதிரையைப்பற்றி அவன் எப்பொழுதுமே பெருமைப்பட்டுக் கொள்வது உண்டு.