பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

டால்ஸ்டாய் கதைகள்

நிகிட்டாவின் விலாப்புறத்திலும் கை அருகிலும், தோல்சட்டை கிழிந்து போயிருந்த இடங்களில் அது தாக்கியது.

‘நீ என்ன நினைக்கிறாய்—நாம் காரமிஷெவோ வழியாகப் போவோமா? அல்லது நேர் பாதையாகவே போகலாமா?’ என்று வாஸிலி கேட்டான்.

காரமிஷெவோ வழியாகச் செல்லும் பாதை அடிக்கடி போக்குவரத்து உள்ளது. அடையாளமாக இருபுறங்களிலும் உயரமான முளைகள் பாதிக்கப்பட்டிருந்தன. நேர் பாதையில் தூரம் குறைவு. ஆனால் அது அதிக உபயோகத்தில் இல்லை. ரோட்டின் ஓரங்களில் அடையாள முளைகள் கிடையாது. அப்படியே இருந்தாலும்கூட அவை பனியினால் மூடுண்டு, கண்ணுக்குப் புலனாகாதபடி மோசமான நிலையிலேயே இருக்கும்.

ஆகவே, நிகிட்டா சற்று நேரம் யோசனை செய்தான். முடிவில் ‘காரமிஷெவோ வழி தூரமானதுதான், என்றாலும் அப்படிப் போவதுதான் நல்லது’ என்றான்.

ஆனால், சுருக்குப்பாதை வழியே போக விரும்பிய வாஸிலி சொன்னான்: ‘ஆனால் நேர் ரோடு வழியே போகும் போது, அந்தக் காட்டை அடுத்த பள்ளத்தைத் தாண்டிவிட்டால் சுலபமாகப் போக முடியுமே. பனிக்கு அடக்கமாகவும் இருக்கும்.’

‘உங்கள் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டான் நிகிட்டா.

வாஸிலி ஆன்ட்ரீவிச், தான் சொல்லிய விதமே செயல் புரிந்தான். கொஞ்ச தூரம் கடந்ததும், பாதை ஓரத்தில் அடையாளத்துக்கு நிறுத்தப்பட்டிருந்த ‘ஓக்’