பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

25

மரக்கட்டை ஒன்று தென்பட்டது. அதில் காய்ந்த இலைகள் இன்னும் ஒட்டிக்கொண்டு காற்றில் ஆடின. அந்த இடத்தை அடைந்ததும் வண்டியை இடது பக்கம் திருப்பினான் அவன்.

அப்படித் திரும்பியதும், அவர்கள் காற்றை எதிர்த்துச் செல்ல வேண்டியதாயிற்று. பனியும் நன்றாக விழத் தொடங்கி விட்டது. வண்டி ஓட்டிக் கொண்டிருந்த வாஸிலி, கன்னங்களை உப்பலாக்கி, மீசை வழியாக மூச்சை வெளியே விட்டான். நிகிட்டா கண்ணயர்ந்து இருந்தான்.

சுமார் பத்து நிமிஷ நேரம் அவர்கள் பேசாமல் முன்னேறினர். திடீரென்று வாஸிலி ஏதோ சொல்லத் தொடங்கினான்.

கண்களைத் திறந்து பார்த்த நிகிட்டா ‘ஆங் என்னது?’ என்று கேட்டான்.

வாஸிலி பதில் சொல்லவில்லை. ஆனால் கீழே குனிந்து பின்பக்கம் கவனித்தான். பிறகு முன்னே குதிரைக்கும் அப்பால் நோக்கினான். குதிரையின் கழுத்திலும் கால்களுக்கு நடுவிலும் வேர்வை கசிந்து மயிரை உடலோடு சடைசடையாகச் சுருள வைத்திருந்தது. குதிரை மெது நடையாக அடி பெயர்த்துச் சென்றது.

‘என்ன விஷயம்?’ என்று மீண்டும் விசாரித்தான் நிகிட்டா.

அவன் பேச்சைப் பழிக்கும் தொனியில் ‘என்ன விஷயம்? என்ன விஷயம்?’ என்று வாஸிலி கோபமாகக் கத்தினான். ‘முளைகளைக் காணவே இல்லை.