பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

43


‘என்ன இது, மறுபடியும் கிரிஷ்கினோ தானா!’ என்று நிகிட்டா ஆச்சர்யத்தோடு கூவினான்.

ஆமாம். அதோ அங்கே அவர்களுக்கு இடதுபுறத்தில் அதே களஞ்சியம். அதன் கூரையிலிருந்து பனி பறந்துகொண்டிருந்தது. அதே சார்பில் இன்னும் கொஞ்சம் தள்ளி, பனியில் உறைந்து தொங்கிய சலவைத் துணிகள்—சட்டைகளும், கால்சட்டைகளும்—காற்றோடு மூர்க்கமாகப் போராடிப் படபடத்துக் கொண்டிருந்தன.

மறுபடியும் அவர்கள் தெருவினுள் பிரவேசித்தார்கள். மீண்டும் அமைதியும் வெம்மையும் உற்சாகமும் ஏற்பட்டன. கழிவுப் பொருள்களால் கறைபட்டுக் கிடந்த வீதியைத் திரும்பவும் பார்த்தார்கள். பேச்சுக் குரல்களையும், பாட்டுக்களையும், ஒற்றை நாயின் குரைப்பையும் மீண்டும் கேட்டார்கள். இதற்குள் இருட்டு அதிகமாகி யிருந்ததால், சில ஜன்னல்களில் விளக்கொளி தெரிந்தது.

ஊரில் பாதி தூரம் போனதும், அங்கே விசாலமான முகப்புடன் நின்ற செங்கல் கட்டிட வீடு ஒன்றை நோக்கிக் குதிரையைத் திருப்பினான் வாஸிலி ஆன்ட்ரீவிச். முன் வாசலை அணுகியதும் வண்டியை நிறுத்தினான்.

விளக்கொளி திகழ்ந்த, பனி படர்ந்த, ஜன்னலருகே போனான் நிகிட்டா. பறக்கும் பனிக்கீற்றுகள் விளக்கொளியின் கதிர்கள் பட்டு மினுமினுத்தன.

அவன் ஜன்னல் மீது சாட்டையால் தட்டினான்.

தட்டுதலுக்கு எதிர்க் குரலாக ‘யார் அங்கே?’ என்ற கேள்வி புறப்பட்டது.