பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

65

ஓட்டினான். ஆனால், முக்கார்ட்டி, கிராமத்தில் கொஞ்ச நேரம் ஓய்வு பெற்றிருந்தபோதிலும், மனம் இல்லாமல் தான் ஓடியது. ஆகையினால் அடிக்கடி அது பாதையை விட்டு விலகிச் செல்வது போல் தோன்றியது. அதனால் வாஸிலி திரும்பத் திரும்ப அதைக் கண்டித்துத் திருத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

‘இதோ வலது பக்கத்திலே ஒரு முளை இருக்கிறது.... இதோ மற்றொன்று... இன்னுமொன்று’ என்று வாஸிலி கணக்கிட்டான். எதிரே கறுப்பாகத் தெரிந்த எதையோ பார்த்து ‘இங்கே முன்னால் காடு இருக்கிறது’ என்று நினைத்தான். ஆனால் அவனுக்குக் காடு மாதிரித் தோற்றமளித்தது வெறும் புதர்தான். அந்தப் புதரைத் தாண்டி அவர்கள் மேலும் சுமார் நூறுகஜ தூரம் சென்றார்கள். எனினும், நான்காவது முளையும் தென்படவில்லை; அங்கே காடும் இல்லை.

‘நாம் சீக்கிரம் காட்டை அடைந்தாக வேண்டும்’ என்று வாஸிலி நினைத்தான். வோட்காவினாலும் டீயினாலும் கிளர்ச்சியுற்றிருந்த அவன் வண்டியை நிறுத்தவேயில்லை. லகானை அசைத்து அவசரப்படுத்தினான். கீழ்ப்படியும் குணமுள்ள அந்த நல்ல குதிரை அவன் குறிப்பை ஏற்று நடந்தது. கொஞ்சம் வேகமாக நடந்தும், சற்றே குதித்து ஓடியும், தான் செலுத்தப்படுகிற திக்கு நோக்கியே அது சென்றது. என்றாலும், தான் சரியான பாதையில் போகவில்லை என்பதை அது உணர்ந்து தானிருந்தது. பத்து நிமிஷங்கள் ஓடின. இன்னும் காடு வரவேயில்லை.

‘சரிதான். நாம் மறுபடியும் வழிதவறிவிட்டோம்’ என்று சொல்லி வாஸிலி வண்டியை நிறுத்தினான்.

64—6